வாழை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதிய கதை, எழுத்தாளர் சோ. தர்மன் போட்ட பதிவு – சர்ச்சையில் சிக்கினாரா மாரி செல்வராஜ்?

0
428
- Advertisement -

‘வாழை’ கதை என்னுடையது என்று பிரபல எழுத்தாளர் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

தற்போது, மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

- Advertisement -

சர்ச்சையில் சிக்கிய வாழை:

இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன், வாழை படம் குறித்து தனது முகநூலில் பதிவிட்டிருக்கும் விஷயம்தான் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், எனக்கு ஏராளமான நண்பர்களிடமிருந்து ஃபோன் கால்கள் வந்தது. அவர்கள் என்னை வாழை படத்தை பாருங்கள் என்று சொன்னார்கள். மேலும், உங்கள் சிறுகதை அப்படியே வாழை படத்தில் இருக்கிறது என்று சொன்னார்கள். அதனால் இன்று தான் நான் அந்த படத்தை பார்த்தேன்.

சோ.தர்மன் பதிவு:

மேலும் அவர், என்னுடைய உடன் பிறந்த தம்பியும், என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. அந்த ஊரில் வாழை தான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும்போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியது தான் என்னுடைய ‘வாழையடி’ என்கிற சிறுகதை. என் கதையில், லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள் மற்றும் அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு போன்ற விஷயங்கள் உண்டு.

-விளம்பரம்-

10 ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதிய சிறுகதை:

ஆனால், டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகியப் போன பொருட்கள், கம்யூனிஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல், விபத்து எதுவும் என் கதையில் கிடையாது. வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால், இது பத்து ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதிய சிறுகதை. என் கதை இலக்கியமாகவே நின்றுவிட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டு கொள்கிறேன்.

வாழை எனக்கு கை கொடுக்கவில்லை:

அதேபோல், ஒரு படைப்பாளி என்கிற வகையில் நான் கர்ப்பமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய ‘நீர்ப் பழி’ என்கிற சிறுகதை தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம்பெற்றிருக்கிறது. கிராமங்களில் வாழையை பற்றி ஒரு கருத்து உண்டு. ‘ வாழை வாழவும் வைக்கும். தாழமும் வைக்கும்’. என்னை வாழை வாழ வைக்கவில்லை என்றுதான் சொல்வேன். மேலும், என்னுடைய சிறுகதையை வாசியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் இந்த பதிவுதான், சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement