கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கட்டுள்ளது. தொடர்ந்து பொழிந்து வரும் கன மழையின் வெள்ள பெருக்காலும், மண் சரிவாலும் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.ஆயிரன கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாநிலத்தில் இருந்தும் உதவி கரத்தை நீட்டி வருகிறது. அங்கு தண்ணீர், உணவு, மின்சாரம் எதுவும் இல்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், அங்குள்ள மக்களுக்கு உதவி செய்ய பல்வேறு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில் பிரபல எலெக்ட்ரானிக் நிறுவனமான சியோமி(Xiaomi) நிறுவனமும் தனது உதவித்தை நீட்டியுள்ளது. சைனீஸ் மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி(Xiaomi) கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் முகாம்களுக்கு உதவும் வகையில் 1000 பவர் பேங்குகளை (power bank ) வழங்கியுள்ளது.

கேரளாவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிவாரண முகாம்களிலும் மின்சரமின்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட 1000 பவர் பேங்குகளை சியோமி(Xiaomi) நிறுவனம் சார்பாக வழங்கபட்டுள்ளது.

Advertisement

கேரள மக்களுக்கா சைனீஸ் நிறுவனம் செய்துள்ள இந்த உதவி மக்களிடம் நல்ல பாராட்டை பெற்று வருகிறது. தற்போதய நிலவரப்படி கேரளாவில் உள்ள சில அணைகள் நிரம்பியுள்ளதால் பெரியாற்றில் வெள்ளபிபெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரள மக்களின் இந்த சோக நிலை விரைவில் மறைய வேண்டும் என்று நாம் அனைவரும் பிராத்திப்போம்

Advertisement
Advertisement