யுவனுக்கு பதில் வேறு ஒரு இசையமைப்பாளர், செல்வராகவன் எழுதி கொடுத்த சீன் – யாரடி நீ மோகினி ரகசியம் சொன்ன இயக்குனர்.

0
112
yaradi
- Advertisement -

90ஸ் கிட்ஸ் ரசிகர்கள் மத்தியில் என்றும் மறக்காத திரைப்படங்களில் ஓன்று என்றால் அது நயன்தாரா மற்றும் தனுஷ் நடித்திருந்த யாரடி நீ மோகினி படம் தான். இப்படத்தினை குட்டி, உத்தம புத்திரன், திருச்சிற்றம்பலம், மீண்டும் ஒரு காதல் கதை போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியிருந்தார். அண்மையில் இவர் இயக்கியிருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படி வெற்றிப்படத்தை கொடுத்திருக்கும் மித்ரன் முதலில் இயக்கிய படம்தான் 2008ஆம் ஆண்டு வெளியான “யாரடி நீ மோகினி” .

-விளம்பரம்-

இத்திரைப்படம் வணீக ரீதியாக மட்டுமில்லாமல் நடிகர் தனுஷுக்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லலாம். இப்படத்தினை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஏற்கனனே இயக்குனர் செல்வராகவனிடன் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவின் இசை இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத பாடலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மித்ரன் நேர்காணலில் பேட்டியளித்திருந்த போது ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தை பற்றி நாம் யாரும் அறியாத பல உண்மைகளை கூறியிருந்தார்.

- Advertisement -

செலவராகவன் எழுதி கொடுத்த Climax :

பேட்டியில் அவர் கூறியதாவது “யாரடி நீ மோகினி” படம் தெலுங்கில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய “ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருளே” என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் `ஆனால் நான் அந்த படத்தை அப்படியே தமிழில் எடுக்கவில்லை. இப்படத்தில் கடைசி 15 நிமிடங்களை மட்டும் இயக்குனர் செலவராகவன் எழுதி கொடுத்தார். மேலும் இப்படத்தில் வரும் ‘பாலக்காடு பக்கத்திலே’ என்ற பாடலை இயக்கும் போது யுவன் சங்கர் ராஜா பிஸியாக இருந்ததார்.

இமான் இசையமைத்து கொடுத்த பாடல் :

அதனால் இப்பாடலுக்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்து கொடுத்தார். இப்பாடல் அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட் அடித்து என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குனர் செல்வராகவனிடம் பணிபுரியும் போது எனக்கு பல விஷியங்களை கற்று கொடுக்க வில்லை ஆனாலும் அவருடன் வேலை செய்யும் போது எனக்கு நல்ல தன்னம்பிக்கை எனக்கு கிடைத்து. மேலும் நமக்கு முன் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அஞ்சக்கூடாது என்று இயக்குனர் கே.பாலச்சந்திரன் அவர்களுடன் செல்வராகவன் பணிபுரியும் போது சொல்லிக்கொடுத்தாராம்.

-விளம்பரம்-

ரகுவரன் கதாபாத்திரம் :

அப்படி இருந்தால் தான் நமக்கு முன் யாராக இருந்தாலும் அவர்களை வைத்து வேலை வாங்க முடியும் என்று செல்வராகவன் கூறியதாக இயக்குனர் மித்ரன் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.மேலும் “யாரடி நீ மோகினி” படத்தில் ரசிகர்களை கவர்ந்த மற்றொரு கதாபாத்திரம் யார் என்றால் அது நடிகர் ரகுவரன். பல திரைப்படங்களில் வில்லனாக பார்த்த இவர் இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு அப்பாவாக பிரமாதமாக நடித்திருந்தார்.

இவரைப்பற்றி பேசிய இயக்குனர் மித்ரன் நடிகர் ரகுவரனை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடன் வேலை செய்வது கடினமாக இருந்தாலும் ரகுவரன் இந்த படத்தில் நடித்தே ஆகவேண்டும் என்பதற்காக அவருடன் ஆர்வமாக பணிபுரிந்தேன். அவரது நடிப்பு மேஜிக்கை போல இருக்கும் அதுமட்டுமில்லாமல் டப்பிங்கிலும் அசத்தும் இவரின் குரலை எடிட்டிங் வேறு விதமாக மெருகேற்றியது என்று தான் முதலில் இயக்கிய “யாரடி நீ மோகினி” திரைப்படத்தை பற்றி பல சுவாரஷ்யமான விஷியங்களை அந்த நேர்காணலில் பகிர்ந்திருந்தார்.

Advertisement