இயக்குனர் என்.கோபி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யாதும் அறியான். இந்த படத்தில் தினேஷ் ஆனந்த் பாண்டே, அப்புகுட்டி, பிரானா, தம்பி ராமையா, சியாமளா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தர்மா பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ தினேஷ், ஹீரோயினி பிரானாவை காதலிக்கிறார். தினேஷ் தன்னுடைய காதலியுடன் ஜாலியாகவும் நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், கன்னத்தில் முத்தம் கொடுத்தால் கூட அனுமதிக்க கேட்க வேண்டும் என்று பிராணா நினைக்கிறார். திருமணத்திற்கு பிறகு தான் எல்லாமே என்பதில் தெளிவாக உறுதியாக இருக்கிறார். தினேஷுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. இதைப் பற்றி தன்னுடைய நண்பரிடம் சொல்லி புலம்புகிறார் தினேஷ்.
இதனால் தினேஷுக்கு அவருடைய நண்பர் யோசனை சொல்கிறார். அவருடைய யோசனைப்படி தினேஷ்
தன்னுடைய காதலியும், தினேஷின் நண்பர் அவருடைய காதலியும் என இரண்டு ஜோடிகளும் வனப்பகுதியில் இருக்கும் சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள். அந்த விடுதியின் பணியாளராக அப்பு குட்டி இருக்கிறார்.
நண்பர் சொன்ன ஐடியாவின் படி தன்னுடைய காதலியுடன் நெருக்கமாக இருக்க தினேஷ் முயற்சிக்கிறார். ஆனால், தினேஷ் உடைய முயற்சிக்கெல்லாம் பிரானா முட்டுக்கட்டை போடுகிறார்.

இருந்தாலுமே தினேஷ் விடாமல் தொடர்ந்து முயற்சி கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் தினேஷின் ஆசைக்கு பிரானா ஒத்துக்கொள்கிறார். தன்னுடைய ஆசை நிறைவேறியது என்ற சந்தோஷத்தில் தினேஷ் இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே தினேஷுக்கு பிரானா பேரதிர்ச்சி கொடுக்கிறார். அதிலிருந்து மீண்டு வருவதற்காக தன்னுடைய நண்பரை தினேஷ் அழைக்கிறார். அவருமே அவருடைய காதலி கொடுத்த பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இப்படி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை தினேஷும் அவருடைய நண்பருமே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பின் 2024 ஆம் ஆண்டு 2026 ஆம் ஆண்டாக மாறுகிறது. தினேஷுக்கு எதிராக நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என்ன? அதனுடைய பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
படத்தில் ஹீரோ தினேஷுக்கு இதுதான் முதல் படம். இருந்தாலுமே தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்.
அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய காதலியிடம் செய்யும் சில்மிஷங்கள், இரண்டாம் பாதியில் வரும் திரில்லர் காட்சிகள் என அனைத்துலுயுமே ஸ்கோர் செய்திருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் பிராணா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அதற்கு பின் படத்தில் வரும் மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள். படத்தில் வரும் பழைய சொகுசு விடுதியில் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் காண்பித்து இருக்கிறார்.

அங்கு நடக்கும் சம்பவங்களும் நன்றாக இருக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு, பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் திரில்லர் காட்சிகள் எல்லாம் பதற வைக்கும் அளவிற்கு இருக்கிறது. அதோடு எளிமையான கதையாக இருந்தாலும் அதை பல திருப்பங்களுடன் இயக்குனர் கொடுக்க முயற்சிப்பது பாராட்டுக்கூடிய ஒன்று. ஆனால், அது சில இடங்களில் ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் நடிப்பு
கதைக்களம்
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது
திரில்லர் விறுவிறுப்பான காட்சிகள்
பல திருப்பம்
குறை:
கிளைமாக்ஸ் இன்னும் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
புதுமுக நடிகர்கள்
மொத்தத்தில் யாதும் அறியான் - முயற்சி






