நாங்கள் மூவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் – சீரியல் நிறைவடைந்த பின் ஸ்வேதா உருக்கம்.

0
3705
yaaradi-nee-mohini
- Advertisement -

சினிமாவிற்கு இணையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான்.

-விளம்பரம்-

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் அந்த சேனலின் சூப்பர் ஹிட் தொடராக திகழ்ந்து வந்தது. ‘யாரடி நீ மோகினி’ தொடர் தான்.சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடித்து வந்தார். இந்த தொடரில் ஸ்வேதா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை சைத்ரா ரெட்டி. இதில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் இந்த தொடர் நேற்றோடு நிறைவடைந்தது. சமீபத்தில் படக்குழுவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த சைத்ரா ரெட்டி, அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். மேலும், ஸ், நக்ஷத்திராவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள சைத்ரா, நாங்கள் மூவரும் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement