நட்சத்திராவை நாங்கள் சிறைபிடித்து வைத்து இருக்கிறோமா ? வருங்கால கணவர் சொன்ன பதில். (அட, இவர் விஜய் குடும்பத்துக்கு மிக நெருக்கமாம்)

0
444
nakshatra
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் வேற யாரும் இல்லைங்க, அஜித்தின் வலிமை படம் பத்தி பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து வரும் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த 7C என்ற சீரியலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார் ஸ்ரீநிதி. ஆனால், இவர் இதற்கு முன்பே குழந்தை பருவத்தில் பல படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இருந்த யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்ரீநிதி நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இதனால் இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருந்தது. இதனை தொடர்ந்து இவர் சில சீரியல்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான வலிமை படம் பார்த்து இவர் பேசி இருந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

- Advertisement -

சர்ச்சையில் சிக்கி இருக்கும் ஸ்ரீநிதி:

இதனால் இவருடைய பெயர் சோசியல் மீடியாவில் பயங்கரமாக அடிபட்டு வருகிறது. அதோடு நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை இருப்பதாக இவர் கூறி இருந்த கருத்தும் பயங்கர சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி சின்னத்திரையில் ஸ்ரீநிதி விவகாரம் தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கின்றது. இதை தொடர்ந்து சீரியல் நடிகையும், தனது தோழியுமான நட்சத்திராவின் திருமணம் குறித்து ஸ்ரீநிதி சில விஷயங்களை பேசி இருக்கிறார். அந்த வீடியோவில், நட்சத்திரா பாதுகாப்பாக இல்லை.

sreenidhi

நட்சத்திரா குறித்து ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோ:

அவள் காதலிக்கிறவனின் குடும்பம் அவளை லாக் செய்து வைத்திருக்கிறது. நக்ஷுவை மீட்க உதவுங்கள் என்று பல விஷயங்களை பேசி இருந்தார். இந்த நிலையில் ஸ்ரீநிதியின் இந்த வீடியோவுக்கு நட்சத்திரா பதிலளித்திருக்கிறார். அதில் அவர், கடந்த சில நாட்களாகவே நான் ஏதோ பிரச்சனையில் இருக்கிறேன் என்று வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. என்னை யாரோ கட்டாயப்படுத்தி பிடித்து வைத்திருக்கிறார்கள், எங்கேயும் விடாமல் வைத்து இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நட்சத்திரா அளித்த பேட்டி:

நான் நன்றாகத்தான் இருக்கிறேன். தினமும் சூட்டிங் போயிட்டு வந்து கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி இருக்கிறார். மேலும், இது தொடர்பாக நட்சத்திரா திருமணம் செய்துகொள்ளப்போகும் விஷ்வா விடமும் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியது, இரு வீட்டிலும் சில பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. இரண்டு தரப்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நட்சத்திரா காதலிப்பவர் அளித்த பேட்டி:

அதில் நல்ல ஒரு முடிவு எடுக்கப்படும். நாங்கள் முறைப்படி மீடியாவுக்கு அறிவிக்கலாம் என்று இருக்கிறோம். அவசியம் சொல்லித் தான் செய்வோம். அதேபோல் சமீப காலமாக அந்த ஸ்ரீநிதி பொண்ணு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மெண்டலி பாதிக்கப்பட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் குடும்பத்தைப் பற்றி அவர்கள் சொன்னது எதுவுமே உண்மை கிடையாது என்றும் கூறியிருக்கிறார். இப்படி நட்சத்திரா, அவர் காதலிக்கும் நபர் தரப்பில் அளித்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

யார் இந்த விஷ்வா :

ஆழ்வார் திருநகர் பகுதியில் டாட்டூ கடை வைத்து இருப்பவர் தான் இந்த விஷ்வா. ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விஷ்வாவின் குடும்பத்துக்கு சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடன் நல்ல நட்பு உண்டாம். அந்தத் தொடர்பில்தான் சேவியர் பிரிட்டோ ஜீ தமிழ் சேனலில் தயாரிக்கும் சீரியல்களின் தயாரிப்பு மேற்பார்வையை விஷ்வாவும் அவரின் சகோதரியும் கவனித்து வருகிறாராம்.

Advertisement