காதலை சொன்ன உடன் நடித்த நடிகை. நிராகரித்த யாரடி நீ மோகினி ஸ்ரீ. ஆனால் ?

0
153930
Yaradi-nee-mohini
- Advertisement -

சின்னத்திரை நட்சத்திரங்களின் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ஹீரோவாக நம் முன் வலம் வருபவர் ஸ்ரீ குமார் கணேஷ். ஸ்ரீ சினிமா துறையில் பிரபல இசையமைப்பாளரான சங்கர் கணேஷின் மகனும் ஆவார். இவரை அதிகம் ‘ஸ்ரீ’ என்று தான்செல்லமாக அழைப்பார்கள். மேலும்,ஸ்ரீக்கு ஒரு சகோதரியும் உள்ளார். ஸ்ரீ தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “யாரடி நீ மோகினி” எனும் சீரியலில் முத்தரசி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும்,ஸ்ரீ சின்னத்திரை நடிகரான தீபக்,சஞ்சீவ் ஆகியோர்களின் மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை சமிதாவை ஸ்ரீ குமார் கணேஷ் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், 2001 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பாண்டவர் பூமி.

-விளம்பரம்-
Image result for yaaradi nee mohini serial"

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக ஷமிதா நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த பாண்டவர் பூமி படத்தில் ஷமிதா அவர்கள் இரண்டு வேடங்களில் நடித்து இருந்தார். ஆகவே இந்த படத்தின் மூலம் தான் ஷமிதா அவர்களுக்கு முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்த ஷமிதா பின்னர் சின்னத்திரையில் களம் இறங்கினார். அதன் பின் ஷமிதா அவர்கள் சன் டிவி சீரியலில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பான சிவசக்தி, பிள்ளை நிலா, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து இருந்தார். தற்போது ஷமிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மௌன ராகம்’ தொடரிலும், கலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ போன்ற தொடர்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : பிரேக்கிங் நியூஸ் : சுஜித் உயிரிழந்துவிட்டான் – வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரபூர்வ தகவல்.

ஸ்ரீ முதன்முதலில் 2003ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த ஆனந்தம் சீரியலில் நடித்தார். அதற்கு பின் இவர் 2005 ஆம் ஆண்டு சன் டிவியிலேயே ஒளிபரப்பான ‘அகல்யா’ என்னும் சீரியலில் சுந்தர் என்னும் பெயரில் வில்லனாக வந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். மேலும்,ஸ்ரீ குமார் அவர்கள் பந்தம், சிவ சக்தி, உறவுகள், இதயம், பிள்ளை நிலா, பொம்மலாட்டம் போன்ற சீரியலில் நடித்து தமிழக மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதோடு 2006 ஆம் ஆண்டு விஜய் டிவி இன் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உள்ளார். பின் ஜீ தமிழில் ஒளிப்பரப்பான ‘தலையனை பூக்கள்’ என்னும் தொடரில் நாகராஜான் என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். இதனைத்தொடர்ந்து ஜீ தமிழில் ‘தேவதையை கண்டேன்’ தொடரில் ஒரு சைகோவாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Related image
Image result for actor shri shamitha

பின் அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகினார். தற்போது ஸ்ரீ குமார் கணேஷ் அவர்கள் ஜீ தமிழில் டாப் சீரியலாக இருக்கும் ‘யாரடி நீ மோகினி என்னும் சீரியலில்’ முத்தரசி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் முத்தரசன் ஆக இவரது நண்பர் சஞ்சீவ் தான் முதலில் நடித்திருந்தார். அதன்பின் சஞ்சீவிக்கு பதிலாக ஸ்ரீ நடித்து கொண்டிருக்கின்றார். ஸ்ரீக்கும்,ஷமிதாவுக்கும் சன் டிவியில் ஒளிபரப்பான சிவசக்தி என்னும் சீரியலின் மூலமாகத் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. முதலில் ஷமிதா தான் தன் காதலை ஸ்ரீயிடம் சொன்னார். ஆனால்,ஸ்ரீ முதலில் நடிகைசமிதா காதலை மறுத்து விட்டார். பின்பு ஸ்ரீ ஒத்துக்கொண்டார். மேலும், ஸ்ரீ குமார் கணேஷ், சமிதா ஆகிய இருவரும் தங்களின் பெற்றோர்களின் சம்மதத்துடன் மிகவும் அழகாகவும், எளிமையாக கெட்டிமேளம் என்ற ஒன்று இல்லாமல் இந்த ஜோடியின் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணத்தில் ஸ்ரீயின் தந்தை கலந்து கொள்ளவில்லையாம். அப்போது ஸ்ரீயின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்தாராம். இதனைத்தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

Advertisement