நயன்தாரா உடன் மூக்குத்தி அம்மன் படத்தில் இணையும் பிக் பாஸ் நடிகை..

0
12025
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். இவர் முதலில் சினிமா திரை உலகில் கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும் இப்போது கதைக் களத்திற்கு ஏற்ற தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக நயன் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளி வந்து சூப்பர் ஹிட் ஆன பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்திலும் நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார். இந்த வருடம் தொடக்கத்திலேயே நயன்தாரா அவர்கள் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து உள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் முக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்குனராக மூக்குத்தி அம்மன் படத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருக்கிறார் என்று பல தகவல் சோசியல் மீடியாவில் வந்தன. சமீபத்தில் இந்த படத்தின் பூஜைகள் கூட நடைபெற்றது.

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கூட வைரலாக பரவியது. ஆனால், அதிலும் நயன்தாரா பங்குபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

-விளம்பரம்-

இதுக்கு முன்னாடியே இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் மூக்குத்தி அம்மன் படத்தை எதிர்நோக்கி உள்ளார்கள்.

Advertisement