13 வருட கனவு, சங்கத்தமிழ் வசனம், ஆடை அலங்காரம் – ஐடியா எப்படி? – மனம் திறந்த ‘யாத்திசை’ இயக்குனர்.

0
882
yaathisai
- Advertisement -

யாத்திசை படம் உருவான விதம் குறித்து இயக்குனர் ராசேந்திரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யாத்திசை. இது தென்திசை என்ற வார்த்தையை குறிப்பிடுகிறது. இந்த படத்தை கே ஜே கணேஷ் தயாரித்திருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியர்களின் வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய பேரரசை வெல்வதற்காக சேரன் தலைமையில் சோழப்பேரரசு போர் புரிகிறது.

-விளம்பரம்-

அவர்களுக்கு துணையாக வேளிர், எயினர் போன்ற பழங்குடி மக்கள் கூட்டமும் துணை நிற்கிறது. ஆனால், போரில் வென்ற பாண்டிய பேரரசு சோழக்கோட்டையை காப்பாற்றுகிறது. இதிலிருந்து தப்பித்த சில சோழர்கள் காற்றில் மறைந்து பாண்டியனை வென்று மீண்டும் சோழ மன்னனின் அதிகாரத்தை கையில் எடுக்க முயற்சிக்கிறார்கள். இறுதியில் பாண்டிய மன்னனை தோற்கடித்து சோழ அதிகாரத்தை கையில் எடுத்தார்களா? பாண்டிய மன்னன் தன்னை நோக்கி வரும் எதிரிகளை வென்றாரா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

- Advertisement -

இந்நிலையில் யாத்திசை படம் உருவான விதம் குறித்து இயக்குனர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது, இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனம், ஆடைகள், சண்டை காட்சிகள் அனைத்துமே பார்வையாளர்கள் மத்தியில் கவனிப்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வரும் கோவில்கள் ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய சங்க இலக்கிய, காப்பிலக்கிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டது. படத்தினுடைய கதையை முடிவு செய்த பிறகு அதற்கு ஏற்ப வசனங்கள் எல்லாம் சங்க கால தமிழில் இருப்பது போன்றே எடுக்கப்பட்டது. திருமுருகன் காளி லிங்கம் என்பவரே தற்போது நடைமுறையில் எழுதப்பட்ட வசனங்களை எல்லாம் சங்கத் தமிழில் மொழி பெயர்த்து கொடுத்தார்.

ஒன்பது – தொண்டு, பேசு – கிள, சுழியம் – பாழ், மனசு – உள், கடவுள் – கா, சிங்கம் – மடங்கல், திமிங்கலம் – கோரா என மாறி இருக்கிறது. இது எங்களுடைய குழுவிற்கு கிடைத்த பெரும் அங்கீகாரமாக கருதுகிறோம். இந்த படத்திற்காக பல ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறோம். அதில் முக்கியமானது ம.சோ. விக்டர் சொல்லாய்வு நூல். அவருடைய பல்வேறு நூல்களில் இருந்தே படத்தின் உடைய மொழி, கலை ஆகியவற்றை எடுத்து அதை திரைக்கதைக்கு ஏற்ப மெருகேற்றி வடிவமைத்திருக்கிறோம். தென்திசை என்பதை தான் யாத்திசை என்ற தலைப்பை வைத்தோம்.

-விளம்பரம்-

இதுவும் ம.சோ. விக்டரின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. அதேபோல் தேவநேய பாவாணரின் குறிப்புகளும் படத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது. தமிழில் அகழாய்வுகள் பண்டைய தமிழ் நாகரீகம் குறித்து பல விவாதங்களை இன்றைய சூழலுக்கு ஏற்ப உருவாகி இருக்கிறது. கோவில் சிற்பங்களின் அடிப்படையிலேயே பெரும்பாலான ஆடை வடிவமைப்பு பணிகளையும் மேற்கொண்டு இருக்கின்றோம். இதற்காக தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் காஞ்சிபுரம், மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் கோவில் சிற்பங்களில் இருந்து படத்திற்கான ஆடைகளை வடிவமைத்திருக்கின்றோம். குறிப்பாக படத்தினுடைய நாயகி கதாபாத்திரம் பயன்படுத்தியிருக்கும் மணிகளால் உருவாக்கப்பட்ட மேலாடை பல்லவ சிற்பங்களில் இருந்து எடுக்கப்பட்டது.அதேபோலவே மற்ற கதாபாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்புகளையும் மேற்கொண்டு இருக்கின்றோம். இந்த திரைப்படம் மிக எளிமையாக, ஆழமாக தமிழர்களின் வரலாற்றை கண்முன் காட்டும் வகையில் எடுக்கப்பட்டது.

இதுவரையிலான தமிழ் சினிமாவில் வரலாற்றுப் புனைவுகள் பதிவு செய்யாத சில காட்சிகளை வெவ்வேறு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் சில காட்சிகள் இப்படி நடந்து இருக்கலாம் என்ற யூக அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு போரில் எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்பதை தாண்டி எந்தவிதமான நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படும் சாத்தியம் மிக குறைவு என்று படத்தை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை இயக்குனர் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement