5 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி கொடுத்த ஸ்ரீ திவ்யா – அதுவும் இந்த படத்துல தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

0
928
sridivya
- Advertisement -

ஐந்து வருடங்களுக்குப் பிறகு சினிமாவிற்கு ஸ்ரீதிவ்யா ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்சு நிறுவனத்தினர் தயாரித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தார் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவர் அழகான கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார். இதனால் முதல் படத்திலேயே இவர் இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஸ்ரீதிவ்யா திரைப்பயணம்:

இந்த படத்தின் போதே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் உருவாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஜீவா, காக்கிசட்டை, மருது, ஈட்டி என வரிசையாக பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் காமெடி திகில் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு அக்கா இருக்காங்களா ! இந்த நடிகையா - புகைப்படம் உள்ளே  ! - Tamil Behind Talkies

சினிமாவில் பிரேக் எடுத்த ஸ்ரீதிவ்யா:

இந்த படத்திற்கு பின் ஸ்ரீதிவ்யா எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு பின் ஸ்ரீதிவ்யா என்ன செய்தார் என்று பலரும் அறியாத ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் ஸ்ரீதிவ்யா மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்திருக்க தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீதிவ்யா திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ரீ-என்ட்ரி கொடுத்த ஸ்ரீதிவ்யா:

மலையாளத்தில் வரவேற்பை பெற்றுள்ள ஜனகணமன திரைப்படத்தில்தான் ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சில வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதிவ்யாவை கண்ட ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தும் புகைப்படத்தை இணையத்தில் வைரலாகியும் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் புதுமுக இயக்குனர் பிரனேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் ஒத்தைக்கு ஒத்த என்ற படத்திலும் ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்.

ஸ்ரீதிவ்யா நடிக்கும் தமிழ் படம்:

இந்த படத்தில் தியாகராஜன் நரேன், வித்யா பிரதீப் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டே இந்த படத்தை உருவாக்கி இருக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈட்டி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement