யாரடி நீ மோஹினி சீரியல் நடிகை நட்சத்திராவின் காதலர் இவரா.! இவரும் நடிகர் தான.!

0
811
Natchathra

ஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகிவரும் ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நடித்து வருபவர் நட்சத்திரா குட்டிசேரி. வெள்ளித்திரையில் கால் பதித்த கையோடு சின்னத்திரையிலும் நுழைந்திருக்கிறார் நட்சத்திரா.

Related image

நடிகை நட்சத்திரா பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில் தான். ஆனால், சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார். இவர் முதன் முதலில் சினிமாவில் தான் அறிமுகமானார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயக்குமார் என்பவர் இயக்கிய ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் நடித்தார்.

இதையும் படியுங்க : இந்த வயதிலும் இப்படி ஒரு பிட்னஸ்ஸா.! நாகர்ஜூனாவின் ஒர்க் அவுட்டை கண்டால் ஷாக்காவீர்கள்.! 

- Advertisement -

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராம்தேவ் என்பவர் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் சரிவர வாய்ப்பு அமையாததால் சீரியல் பக்கம் திரும்பினார் அம்மணி. இந்த நிலையில் இவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

This image has an empty alt attribute; its file name is Natchathra-1.jpg

இவர் அறிமுகமான கிடா பூசாரி மகுடி படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ராம்தேவை தான் இவர் திருமணம் செய்துகொள்ள போகிறாராம். அந்த படத்தில் நடித்த போதே இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. தற்போது இவர்கள் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடம் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement