கே ஜி எப் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு இவ்வளவு வயசு தான் ஆகுதா.! பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.!

0
634
Kgf

பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது அது தான் கே ஜி எப் திரைப்படம். தமிழ் மட்டுமல்லாமல் தெலுகு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகி உள்ள படமாக அமைந்த்து. மேலும், இதுவரை எந்த ஒரு கன்னட படமும் செய்யாத பல்வேறு வசூல் சாதனைகளை படைத்தது வருகிறது இந்த படம்.

இந்த படத்தில் கதாநாயகனாகனின் அம்மாவாக நடித்தவரின் வயதை கேட்டால் நீங்கள் ஆடிப்போவீர்கள். அவருடைய பெயர் அர்ச்சனா ஜொய்ஸ். மேலும், அவருக்கு 29 வயது மட்டும் தான் ஆகிறது. இந்த சிறு வயதில் இப்படி ஒரு சவாலான அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவருக்கு பாராட்டு மாலை குவிந்தது.

பெங்களூரை பூர்விகமாக கொண்ட இவர் சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். பின்னர் ஜீ கன்னட தொலைக்காட்சியில் ‘மஹாதேவி’ என்ற தொடரில் நடித்து வந்தார். பின்னர் தனது முதல் படத்திலேயே அம்மா வேடத்தில் நடித்து தற்போது அனைவரது ஈர்த்துள்ளார். இந்த தொடர்ந்து இவர் இன்னும் இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளாராம்.