சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்டில் தகாத இடத்தில் தொட்ட நபர் – யாஷிகா செய்துள்ள தரமான செயல்.

0
764
santhanam
- Advertisement -

தவறாக தன்னிடம் நடந்து கொண்ட நபரிடம் யாஷிகா ஆனந்த் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர். அதோடு இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். மேலும், இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

யாஷிகா ஆனந்த்துக்கு ஏற்பட்ட விபத்து:

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி இருந்தார். ஆனால், சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார். விபத்திற்குப் பின்னர் யாஷிகாவால் சரியாக நடக்க முடிய வில்லை. இதனால் அவர் நடித்து வந்த படங்கள் மற்றும் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தற்காலிகமாக விலகி இருந்தார்.

யாஷிகா ஆனந்த் நடித்த படம்:

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், தான் முன்பைப் போல டாஸ்க்குகளை செய்ய முடியாது என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம். விபத்தில் இருந்து தேறி வந்து இருக்கும் யாஷிகா மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார். சமீபத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘கடமையை செய்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

யாஷிகா ஆனந்த் நடிக்கும் படங்கள்:

தற்போது யாஷிகா ஆனந்த் அவர்கள் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர்சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்குகிறார். அதன் பின் கன்னடத்தில் சைரன் என்ற படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயர் இடாத ஒரு ஹாரர் படத்தில் நடிக்கிறார். அதோடு இன்னும் இரண்டு படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இப்படி ஐந்து படங்களில் பிஸியாக யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட நபர் குறித்து யாஷிகா ஆனந்த் கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த் போஸ்ட்:

அதாவது, யாஷிகா ஆனந்த் தன்னுடைய 14 வயதிலேயே சந்தானத்தின் ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்திருந்தார். அப்போது ஒரு நபர் யாஷிகா ஆனந்திற்கு பின்னால் தட்டி இருக்கிறார். இதனால் கோபமான யாஷிகா அவருடைய அந்தரங்க உறுப்பிலேயே உதைத்து விட்டார். இந்த விஷயத்தை தற்போது அவர் சோசியல் மீடியாவில் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement