பொய் மேல பொய்..! யாஷிகா,ஐஸ்வர்யா முகத்திரையை கிழித்த கமல்.! குறும்படம்

0
178

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு திடுக்கிடும் மாற்றம் ஒன்று நேற்று நடந்தது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்த்த ஐஸ்வர்யா மக்களால் காப்பாற்றபட்டுவிட்டார் என்று கமல் அறிவித்ததும் அரங்கமே அமைதியாக உறைந்து போனது.

Aishwarya

நேற்றைய நிகழ்ச்சியில் கமல் முழுக்க முழுக்க ஐஸ்வர்யாவை தான் தாக்கி பேசி இருந்தார். இந்த வாரம் போன் டாஸ்கின் போது சென்ராயனை ஏமாற்றி டாஸ்க் செய்ய வைத்தது. ஐஸ்வர்யா கூறிய போய்க்கு யாஷிகா உடந்தையாக இருந்தது என்று இரு குறும்படங்களை போட்டு காண்பித்தார் கமல்.

இந்த வாரம் நடந்த போன் டாஸ்கில் சென்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா, டாஸ்க்கை செய்ய வைத்தார் என்று கமல் கூறினார். ஆனால், அந்த பொய்யை மறைக்க ஐஸ்வர்யா எனக்கு போனில் சொன்னது புரியவில்லை அதனால் தான் நான் சென்ராயனிடம் மாற்றி கூறிவிட்டேன் என்று அடுக்கடுக்காக பல பொய்களை கூறினார். இதனால் கமல் அவர்கள் ஐஸ்வர்யாவிற்கு முதல் குறும்படம் ஒன்றை போட்டு காண்பித்தார்.

முதல் குறும்படம்-ஐஸ்வர்யா.!

அந்த முதல் குறும்படத்தில் ஐஸ்வர்யாவிற்கு முதலில் அழைப்பு வருகிறது அந்த அழைப்பில் ஐஸ்வர்யா அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சென்ராயனை கன்வின்ஸ் செய்து அவரது முடியை சிவப்பு நிறத்தில் கலர் செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சென்ராயனிடம் சென்று நீங்கள் கலர் செய்தால் நீங்கள் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவீர்கள் என்று கூறுகிறார்.

Aishwarya

அதன் பின்னர் மீண்டும் ஐஸ்வற்யாவிற்கு ஒரு அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில் நீங்கள் சென்ராயனிடம் பொய்யான வாக்குறுதியை கூறுயுள்ளீர்கள் என்றதும் ஐஸ்வர்யா, எனக்கு தெரியும் நான் பொய் தன சொன்னேன் இது என்னுடைய கேம் தான் அவருக்கு எந்த டாஸ்க் வந்தாலும் அதனை நான் செய்துவிடுகிறேன் என்று கூறுகிறார்.

இந்த குறும்படம் மூலம் ஐஸ்வர்யா, சென்ராயனை வேண்டுமென்றே பொய் கூறி தான் டாஸ்க்கை செய்ய வைத்தார் என்று கமல் நிருபித்தார். அதன் பின்னர் யாஷிகாவுடன் பேசிய கமல், யாஷிகாவும் இந்த பொய்யில் பங்கேற்றுள்ளார் என்று கூறுகிறார். அதற்கு யாஷிகா, எனக்கு ஐஸ்வர்யா பொய் சொல்கிறார் என்பது டைனிங் ஏரியாவிற்கு(சென்ராயனிடம்,ஐஸ்வர்யா முதன் முறை பொய் கூறிய போது )ஐஸ்வர்யா சென்ற போது தான் தெரியும் என்கிறார். பின்னர் கமல், ஐஸ்வர்யா கூறிய பொய்யை நீங்கள் எப்போது அந்த பொய்யை தடுக்க நினைத்தீர்கள் என்றதும், நான் வாஷ் ரூமில் இருந்து வந்த போது தான் நான் சொன்னேன் நீ சென்ராயனிற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறியதாக யாஷிகா குறிக்கிறார். இதையடுத்து இரண்டாவது குறும் படம் ஒன்றை காண்பித்தார் கமல்.

Aishwarya

குறும்படம் 2- யாஷிகா.!

இந்த குறும் படத்தில் யாஷிகா ஸ்மோக்கிங் அறையில் இருக்கிறார், பின்னர் அந்த அறைக்குள் செல்லும் ஐஸ்வர்யா யார்கிட்டயும் சொல்லதா இது ஒரு யுத்தி தான்.அந்த போன்ல நீங்க அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிக்கணும்னா சென்ராயன கன்வின்ஸ் பண்ணி அவரோட முடிய கலர் செய்ய சொன்னாங்க. ஆனால், எந்த மாதிரி உத்திய பயன்படுத்தலாம்னு அவங்க சொல்லல என்றது யாஷிகா, சென்ராயனை ஏமாத்திடு என்று ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார். அதன் பின்னர் சென்ராயன், ஐஸ்வர்யாவிடம் என்னை காப்பற்ற தான் கலர் செய்துகொள்ள சொன்னர்களாக என்று கேட்ட போது யாஷிகா, ஐஸ்வர்யா அருகில் தான் அமர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், அப்போதும் ஐஸ்வர்யா பொய் சொன்னால் என்று யாஷிகா கூறல்விலை.

yshikaஇறுதியில் சென்ராயனிடம் பேசும் யாஷிகா, ஐஸ்வர்யா கூறிய பொய் தனக்கு தெரியவே தெரியாது என்பது போல ஐஸ்வர்யா பொய் சொன்னது தப்பு தான். அவ ஜனனி வான்வின்ஸ் பண்ணது போல உங்களை கன்வின்ஸ் செய்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு சென்ராயன் நீயாவது சொல்லி இருக்கலாமே என்று யாஷிகாவை கேட்டதும். அண்ணா உங்க தலைல கலர் பண்ணதுகப்பரம் தான் எனக்கு அவ பொய் சொன்னான்னு தெரியும் என்று கூறுகிறார். இந்த குறும் படம் முடிந்த பிறகு ஐஸ்வர்யாவை காப்பாற்ற யாஷிகாவும் பொய் சொன்னது தெளிவாக தெரிந்தது.