பாலாஜி, சென்ராயன், வைஷ்ணவி..! 3 பேருக்கு பட்ட பெயர் வைத்த யாஷிகா, ஐஸ்வர்யா.! இப்படி ஒரு பெயரா..?

0
172
Bigg-Boss

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐந்தாவது போட்டியாளராக ஷாரிக் வெளியேற்றத்திற்கு பிறகு யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மஹத் அடுத்த வாரம் நாமினேஷன் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். யாரை இந்த வாரம் நாமினேட் செய்ய வேண்டும் என்பது பற்றிய உரையாடலாகவே அது இருந்தது.

daniel

அப்போது மஹத் அவர்கள் சென்றாயனை கண்டிப்பாக நோமின்டே செய்யப்போவதாக கூறினார். அதற்கு யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ரசத்தை நோமின்டே செய்ய கூறினார். மஹத் அவர்களுக்கு முதலில் ரசம் யார் என்று புரியவில்லை பிறகு ரித்விக்காவை தான் ரசம் என்று குறிப்பிடுகிறார்கள் என்று அவர் புரிந்து கொண்டார்.

அதோடு ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு அவர்களுது பெயரின் முதல் எழுத்தை குறிக்கும் வகையில் பட்ட பெயரை வைத்துள்ளனர். அதில் பொன்ன்னம்பலத்தின் பெயர் “பொரியல்” ஜனனியின் பெயர் “ஜலப்பினோ” பாலாஜியின் பெயர் “பாசந்தி” வைஷ்ணவியின் பெயர் “வெஜ் பிரைட் ரைஸ்” சென்ராயனுக்கு செஷ்வான் “பிரைட் ரைஸ்” என்று பெயர் வைத்துள்ளனர்.

ஏற்கனவே டாஸ்கின் போது பாலாஜி மீது குப்பை கொட்டிய ஐஸ்வர்யா, பாலாஜி தன்னை பற்றி புறம் பேசியதை கண்ட பிறகு தான் அவ்வாறு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால்,அதை தான் தற்போது ஐஸ்வர்யா செய்து வருகிறார். அதே போல மஹத்தும் பாலாஜியிடம் நேரில் அண்ணா என்று உருகி உருகி பேசுகிறார். ஆனால், அவருக்கு பின்னால் வயது வித்யாசம் பார்க்காமல் யாஷிகா, ஐஸ்வர்யா, மஹத் இப்படி பட்டப்பெயர் வைத்து கிண்டல் செய்வது மிகவும் கண்டிக்கதக்க விடயம் தான்.

Balaji

அதிலும் குறிப்பாக பிக் பாஸ் போட்டியாளர்களிலேயே மிகவும் வயதில் சிறியவரான யாஷிகா தன்னை விட வயதில் மூத்தவர்களை பட்டப்பெயர் வைத்து கிண்டல் செய்வது ஏற்ப்புடையதாக இல்லை. தொடர்ந்து இது போன்ற எரிச்சலூட்டும் செயல்களை செய்து வரும் ஐஸ்வர்யா மற்றும் யாசிகா எப்போது நாமினினே ஷனலில் வருவார்கள், எப்போது இவர்களை வெளியேற்றலாம் என்று ரசிகர்கள் எதிநோக்கியுள்னர்.