அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்ட யாஷிகா-மஹத்.! விவரம் உள்ளே

0
950
Yashika

சமீப காலமாக பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் மஹத் மீது தான் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. அவர் நடிகை யாஷிகாவிடம் நெருக்கமாக இருந்து கொண்டு பல அநாகரீக செய்லகளை செய்து வருவதால் பார்வையாளர்களுக்கு இவர்கள் இருவர் மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது.

mahat

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே மஹத், யாஷிகாவிடம் மிகவும் அத்து மீறியே நடந்து கொள்கிறார். அனைவர் முன்பும் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று இவர் செய்யும் அநாகரீக செயல்கள் ஏராளம். இதனால் இவர் எப்போது ஏவிக்ஷனில் வருவார், இவரை எப்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றலாம் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை நடிகர் பொன்னம்பலம் மறைமுகமாக கண்டித்தார் அப்படி இருந்தும் இவர் திருந்தியபாடில்லை. இதில் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடிகை யாஷிகா மற்றும் நடிகர் மஹத் செய்த காரியம் மக்களுக்கு இவர்கள் இருவர் மீதும் மேலும் எரிச்சலை அதிகரித்துள்ளது.

Yashika-anand

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான மிட் நைட் மசாலா நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரை எழுப்ப சென்ற மஹத்திடம் , நடிகை யாஷிகா “உன் ஜட்டியை அயன்பாக்ஸ் வைத்து கிழித்துவிடுவேன்” அதுமட்டும் என்று மிகவும் மோசமாக பேசியுள்ளார். செயல்கள் மூலம் அருவருப்பாக நடந்து கொண்ட மஹத்-யாஷிகா தற்போது வார்த்தைகள் மூலம் அருவருப்பாக நடந்து வருகின்றனர். பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் ஒரு ஆணும் பெண்ணும் இப்படியா பேசிக்கொள்வது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.