என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்ததாம்.!புகைப்படம் உள்ளே

0
440

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்ட’ . கடந்த 2017 ஆம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் ஓராண்டிற்கு மேலாகியும் இன்னும் இந்த படம் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது.

Enai_Noki_Paayum_Thota

நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டே இந்த படத்தின் ஒரு சில தகவல்கள் வந்தது.மேலும் , “மறுவார்த்தை பேசாதே” என்ற இப்படத்தின் பாடல் ஒன்றும் இணையத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பிரபலமானது.

அதன் பிறகு இந்த படத்தின் எந்த தகவலும் வெளியாகவில்லை, தற்போது இந்த படத்தை குறித்து சமீபத்தில் ஒரு தகவலை அளித்துள்ள நடிகர் தனுஷ், இந்த படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று உறுதியளித்துள்ளார். மேலும், இந்த படத்தை பற்றிய மேலும் ஒரு சுவாரசியமான தகவலை இந்த படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

samuthirakani

இந்த படத்தில் ஒரு முக்கிய வில்லனாக கௌதம் மேனனின் உதவியாளர் ஒருவர் தான் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் சமுத்திரக்கனியை தான் நடிக்க வைப்பதாக இருந்ததாம், ஆனால், சில பல காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது என்று கௌதம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ராணா டகுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.