என் உண்மையான பெயர் அதுதான், இப்போ அதுக்கு என்ன ! குஸ்பு ஆவேசம்

0
3481

80 மற்றும் 90களில் தமிழ் படங்களில் முன்னனி தமிழ் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ சுந்தர். கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் குஷ்பூ.
தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் குஷ்பு. தற்போது இயக்குனர் நரரும் தயாரிப்பாளர் சுந்தர்.சி யுடன் திருமணம் ஆகி தமிழகத்தில் செட்டில் ஆகிவிட்டார். கடந்த 30 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் இருந்து வருகிறார். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ‘நக்த் கான்’.

இதனை வைத்து, சமூக வலைதளங்களில் சில மதவாதிகள் குஷ்பூவின் உண்மையான பெயரை கண்டிபிடித்துவிட்டதாக அவரை கலாய்த்து வந்தனர்.

இதற்கு சாட்டையடி கொடுத்தது போல குஷ்பூ தற்போது ட்வீட் செய்துள்ளார்:


என்னை களாய்ப்பதாக நினைத்து சிலர் என் பெயர் நக்த் கான் என்று கண்டுபிடித்துள்ளனர். முட்டாள்களா அது தான் என் பெற்றோர் எனக்கு வைத்த பெயர். ஆமாம், நான் ஒரு கான். இப்போ அதற்கு என்ன? விழித்துக் கொள்ளுங்கள், நீங்கள் 47 ஆண்டுகள் லேட் என்று அவர்களை பதிலுக்கு கலாய்த்துள்ளார் குஷ்பு.

இதனால் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.