‘எங்களோட கஷ்டம் வலி எல்லாம்’ – குண்டாக இருப்பவர்களை உருவக் கேலி செய்பவர்களுக்கு யோகி பாபு பகிர்ந்த Meme

0
519
- Advertisement -

உருவகேலி கிண்டலுக்கு நடிகர் யோகி பாபு பகிர்ந்து இருக்கும் மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு. இவர் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த மான் கராத்தே படத்தில் யோகி பாபு காமெடி ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து இவர் தன்னுடைய நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மத்தியில் மெல்ல மெல்ல ஈர்க்கப்பட்டு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது யோகி பாபு இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் யோகி பாபு கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கின்றார். மேலும், இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

யோகிபாபு திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவரின் கால்சீட் கிடைக்காதா? என்று பல இயக்குனர்கள் ஏங்குகின்றனர். அந்த அளவிற்கு யோகி பாபு பிஸியான நடிகராக கலக்கி கொண்டு இருக்கிறார். மேலும், இவர் சில ஆண்டாகவே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதிலும் இவர் ஹீரோவாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது முதன்மை கதாப்பாத்திரத்தில் யோகி பாபு நடித்து வருகிறார்.

லவ் டுடே படம்:

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே படத்தில் நடிகர் யோகி பாபு நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கிறார். இப்படத்தினை தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் இணைந்து ‘எ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறார்கள். இவானா, சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இன்றைய காலகட்ட காதலை மையமாக வைத்து இந்த படம்
வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

யோகி பாபு மீம்ஸ்:

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் உருவகேலி குறித்து இந்த படத்தில் ஒரு காட்சி வரும். அதை தான் தற்போது யோகிபாபு மீம்ஸாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், வெள்ளையா ஒல்லியா இருந்தால் தான் அழகு. என்ன மாதிரி குண்டாக இருந்தால் கலாய்ப்பது, உருவ கேலி பண்ணுவது எல்லாம் செய்வார்கள். எங்களுடைய கஷ்டமும் வலியும் யாருக்குமே புரியாது என்று கூறியிருக்கிறார்.

yogibabu

வைரலாகும் மீம்ஸ்:

உண்மையாலுமே, நடிகர் யோகி பாபு சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் பல உருவகேலிகளை சந்தித்து இருக்கிறார். இதனால் பல பட வாய்ப்புகளை இழந்திருக்கிறார். பிறகு அவருடைய உருவமும், முடியும்தான் சினிமாவுலகில் அடையாளத்தை உருவாக்கி தந்தது. இன்று அவர் காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். திறமை இருந்தால் நிச்சயம் எங்கேயும் சாதிக்கலாம் என்பதை ஒரு உதாரணமாக நடிகர் யோகி பாபு திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது யோகி பாபுவின் இந்த மீம்ஸ் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement