அம்மனே காலி பண்ணிடும் – ஊரையே மிரட்டும் யோகி பாபுவின் பூஜாரி அண்ணன் ? – என்ன நடந்தது ?

0
292
yogibabu
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல காமெடி நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை சேர்ந்தவர். இவரது அப்பா ஒரு ராணுவ வீரர் அவருக்கு வேலு, பாபு, ராஜா, விஜயன் என் 4 மகன்களும் ஒரு மக்களும் உள்ளார். இதில் மூன்றாவது மகன் தான் யோகி பாவு. இரண்டாவதாக பிறந்தவர்தான் யோகிராஜா இவர் ஆரணியில் வசித்து வருகிறார். இவர் மேல் தான் தற்போது புகார் என்று அங்குள்ள மக்களால் அளிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அந்த புகார் என்னவென்றால் நடிகர் யோகி பாபுவின் அண்ணன் சாமியாராக உள்ளார். அவர் அங்குள்ள மக்களை பயமுறுத்தி வீடுகளை காலி செய்யவேண்டும் என்று வற்புறுத்துவதாக கூறியிருந்ததை அடுத்து பிரபல ஊடகம் ஓன்று அங்கு சென்று விசாரணை நடத்தியது இதில் யோகி பாபுவின் அண்ணனான யோகிராஜாவை பற்றிய பல உண்மைகள் தெரிய வந்தன. யோகிபாபுவின் அண்ணன் யோகிராஜா திருமணம் செய்து கொல்லாமல் சாமியாராகி விட்டார். இவர் அந்த ஊரில் புறம்போக்கு நிலத்தில் காளி கோளில் ஒன்றை கட்டினார்.

- Advertisement -

யோகிபாபு அண்ணன் :

ஆனால் அதற்கு மின் இணைப்பு தராத காரணத்தினால் அவருடைய இடிந்த வீட்டையே இடித்து அங்காளம்மன் கோவில் ஓன்று கட்டினார். அந்த கோவில் பக்கத்தில் கருமாரியம்மன் கோவில் ஓன்று எழுப்பி முக்கிய தினங்களில் ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலி கொடுப்பர் என்றும், சுவாமி பாடல்களில் காலையில் இருந்து இரவு 11 மணிவரை ரேடியோவில் ஒலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்களுக்கு தொந்தரவாக இருந்தாலும் அவர் பில்லி, சூனியம் வைப்பதினால் அவரை எதிர்த்து கேள்வி கேட்ட மக்கள் பயப்படுகிறார்கள் என்று கூறப்பட்டது.

பக்கத்துக்கு வீட்டார் கூறியது :

அந்த கோவிலுக்கு பக்கத்தில் இருக்கும் ஒருவர் கூறிய போது அந்த கோவிலினால் மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. யாரோ பொய் புகார் கூறியிருக்கிறார்கள். அந்த சாமியார் யாரையும் வீட்டை காலி பண்ண சொல்ல வில்லை. ஆனால் கருமாரியம்மன் கோவிலுக்கு வரும் பெரியவர்கள் காளி கோவிலின் பக்கத்தில் வீடுகள் இருந்தால் அம்மன் கோவப்பட்டு காலி செய்து விடும் என்று கூறியதற்குத்தான் மக்கள் பயப்படுகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் கூட கோவிலில் இருந்து அதிக சப்தம் வருகிறது என்று மக்கள் கூறியதை அடுத்து பாட்டு போடுவதில்லை. மேலும் அவர் யாரிடமும் பணம் கேட்பதில்லை அவர்களாக கொடுத்தால் வாங்க்கிக்கொள்வார் என்று நினைக்கிறன் என்று அவர் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

யோகிபாபுவின் மூத்த அண்ணன் :

யோகிபாபுவின் மூத்த அண்ணனான யோகி ராஜாவிடம் கேட்டபோது “என்னுடைய தம்பிதான் சுவாமி யோகிராஜா. அவர் தற்போது சென்னைக்கு சென்றிருக்கிறார். அவர் ஒரு ஊனமுற்றவர் அதனால் அவர் நடப்பதற்கே இருவரின் உதவி தேவை. அப்படி இருக்கும்போது அவர் எப்படி மற்றவர்களை மிரட்டி நிலங்களை அபகரிப்பார். அவருக்கு ஒரு சென்ட் இடம் கூட கிடையாது நான் தற்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். என்னுடைய அப்பா வாழைப்பந்தலில் வீடு ஓன்று காட்டினார் அதில்தான் என்னுடைய அம்மா இருக்கிறார். என்று அவர் அண்ணன் யோகிராஜா கூறினார்.

தொலைபேசி வழியே பேசிய யோகிராஜா :

இந்த நிலையில் தொலைபேசியில் வழியே யோகிபானுவின் அண்ணனான யோகிராஜாவை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது `என்னை பற்றி யாரோ தவறாக கூறியிருக்கிறார்கள். என்னை பற்றி நான் வசிக்கும் தெருவில் கேளுங்கள் நான் மிரட்டி நிலங்களை பறிக்கிறேனா இல்லையா என்று. பக்கத்துக்கு வீட்டார் கூட நிலத்தை கொடுத்தார்கள். ஆனால், விலை அதிகமாக இருந்ததினால் வாங்கவில்லை. மேலும் நான் என்ற உயிர் பலியும் கொடுப்பதில்லை பக்கதர்கள் அவர்களது வேண்டுதல் நிறைவேறியதினால் அவர்களுடய நேர்த்திக்கடனை செய்கிறார்கள். அதனை நான் எப்படி வேண்டாம் என்று சொல்வது? என்று கூறினார் சாமியார் யோகிராஜா.

Advertisement