ஷூட்டிங்கில் யோகி பாபு மீது கோபம் காட்டிய நடிகை. அப்படி என்ன செஞ்சார். நடிகை சொல்வதை கேளுங்க.

0
5854

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் யோகி பாபுவிற்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. 2009-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ‘யோகி’. பிரபல இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை சுப்ரமண்யம் சிவா இயக்கியிருந்தார். இதில் யோகி பாபு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இது தான் அவர் அறிமுகமான முதல் படமாம்.

Actress Rashmi Gopinath Photos - Kalakkal Cinema

இதனைத் தொடர்ந்து ‘சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, வேலாயுதம், தூங்கா நகரம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டகத்தி, பட்டத்து யானை, சூது கவ்வும், வீரம்’ போன்ற படங்களில் சிறிய வேடங்களில் யோகி பாபு நடித்திருந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’, படத்தில் ‘வவ்வால்’ என்ற கேரக்டர் மூலமும், கிருஷ்ணாவின் ‘யாமிருக்க பயமே’ படத்தில் ‘பண்ணி மூஞ்சி வாயன்’ என்ற கேரக்டர் மூலமும் யோகி பாபு அதிக கவனம் பெற்றார்.

இதையும் பாருங்க :
எம் குமரன் s/o மஹாலக்ஷ்மி ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட சில Unseen புகைப்படங்களை வெளியிட்ட நதியா.

- Advertisement -

‘யாமிருக்க பயமே’ படத்துக்கு பிறகு ‘ஐ, காக்கி சட்டை, இந்தியா பாகிஸ்தான், காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, ரெமோ, மெர்சல், கலகலப்பு 2, சர்கார், விஸ்வாசம், தடம்’ என அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் யோகி பாபு காமெடியனாக வலம் வந்தார். சமீபத்தில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்திலும் ‘காமெடி கிங்’ யோகி பாபு நடித்திருந்தது குறிப்பிடத்ததக்கது.

காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் யோகி பாபு ‘தர்ம பிரபு, கூர்கா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். தற்போது, யோகி பாபுவின் கால்ஷீட் டைரியில் பிரபல நடிகர்களின் படங்களும் வரிசையாக உள்ளது. அதுபோக, ஹீரோவாக ‘மண்டேலா, பன்னி குட்டி, காக்டெய்ல்’ என அடுத்தடுத்து படங்கள் வைத்திருக்கிறார் யோகி பாபு. இதில் ‘காக்டெய்ல்’ என்ற படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக ராஷ்மி கோபிநாத் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகை ராஷ்மி கோபிநாத் அளித்த பேட்டியில் யோகி பாபு குறித்து பேசும்போது “ஷூட்டிங் ஸ்பாட்டில் யோகி பாபு காமெடியாக பேசிக் கொண்டே இருப்பார். ஆகையால், டேக் போகும் முன் கோபமான விஷயம் ஏதேனும் நினைத்து கொண்டு நடிக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.இந்த படத்தில் யோகி பாபு – ராஷ்மி கோபிநாத்துடன் இணைந்து மைம் கோபி, ஷாயாஜி சிண்டே, கவின், மிதுன் மகேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதையும் பாருங்க : பாப் கட், மாடர்ன் லுக். அடையாளம் தெரியாதபடி மாறியுள்ள சிவா மனசுல சக்தி பட நடிகை.

இப்படத்தினை இயக்குநர் ரா.விஜய முருகன் இயக்கியிருக்கிறார். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, ‘காக்டெய்ல்’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement