கத கேட்டு படம் பண்றது இல்ல, அதை பார்த்து தான் படத்தில் நடிப்பேன். ஷூட்டிங்கு போகாம கொளுத்து வேலைக்கா போறேன் – யோகி பாபு

0
1136
Yogibabu
- Advertisement -

என்னுடைய வாழ்க்கையை மாற்றியவர்கள் இவர்கள் தான் என்று யோகி பாபு அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதலிடத்தில் இருக்கும். இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளை பெற்று இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார்.

- Advertisement -

யோகிபாபு திரைப்பயணம்:

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் எல்ஜிஎம். இந்த படத்தை கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. பின் தற்போது யோகி பாபு நடித்திருந்த படம் ஜெயிலர். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள்.

லக்கி மேன் படம்:

இதுவரை ஜெயிலர் படம் 525 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனை அடுத்தும் தொடர்ந்து யோகி பாபு பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் லக்கி மேன். இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியிருக்கிறார். இந்த படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தினுடைய பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் யோகி பாபு சொன்னது:

இதில் கலந்துகொண்ட யோகி பாபு கூறி இருப்பது, என்னுடைய வாழ்க்கையில் நான் அன்லக்கி என்று தான் சுற்றிக் கொண்டிருந்தேன். 23 ஆண்டுகளாக இந்த சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் எனக்கு கிடைத்த நல்ல இயக்குனர்களால் தான் இப்போது நான் லக்கி மேன் ஆகிவிட்டேன். இந்த படம் எனக்காகவே உருவானது போல் இருக்கிறது. பாலாஜி வேணுகோபால் என்னிடம் வரும்போது அவருடைய எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தது. என்னிடம் வரும் ஒவ்வொரு இயக்குனர்கள் இடமும் கதை கேட்டு படம் பண்ண மாட்டேன்.

இயக்குனர்கள் குறித்து சொன்னது:

அவர்கள் படும் கஷ்டத்தை கேட்டு தான் படம் பண்ணுவேன். எனக்கு சோறு போட்டது காமெடி தான். என்னோட கடைசி காலம் வரை காமெடியனாகத்தான் இருப்பேன். எல்லா மொழிகளிலும் காமெடியனாக நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. பாலாஜி, மடோன் அஸ்வின் போன்ற இயக்குனர்கள் எனக்கு நல்ல படம் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல நல்ல கதைகள் வந்தால் அதற்காக நேரம் ஒதுக்கி கதாநாயகனாக படம் பண்ணுவேன். எதற்காகவும் காமெடியனாக நடிப்பதை விட்டு விட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement