தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிற்து.
தமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவர் தான் தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார்..யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் 63 படத்திலும் கமிட் ஆகியுள்ளார் யோகி பாபு. அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார்,மேலும்,நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் விவேக் விஜய்யின் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.அதே போல யோகி பாபவும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இவர் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் நடித்துள்ளார். அதே போல விஜயுடன் மெர்சல், சர்கார் போன்ற படங்களில் நடித்துள்ளார்..
இந்த படத்தில் நடிகர் யோகிபாபு தான் நடிப்பதற்கு கேட்டுள்ள சம்பளம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகி பாபு நடிப்பதற்கு இதுநாள் வரை நாள் ஒன்றுக்கு ரூ 2 லட்சம் சம்பளமாக வாங்கி வந்தார். சமீபத்தில் அதனை ரூ 3 லட்சமாக உயர்த்தியுள்ள நிலையில் தற்போது தளபதி 63 படத்தில் நடிக்க ரூ 80 லட்சம் சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.