பணம் வாங்காமல் நடித்தார் சந்தானம். ஆனால், யோகி பாபு 3 வருஷம் ஏமாத்திட்டு வரார்- தயாரிப்பாளர் விளாசல்.

0
44299
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. நடிகை திரிஷாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 96. அதற்கு பிறகு அவருக்கு தமிழில் படங்கள் சரியாக அமையவில்லை. தற்போது இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடித்து உள்ள படம் “பரமபதம் விளையாட்டு”. இந்த படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் பிப்ரவரி 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-
K Rajan @ Producer Radhakrishnan Team Press Meet Stills

இந்த படத்தில் நடிகை திரிஷா அவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொலிடிக்கல் திரில்லர் படம் என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் நடிகர் சந்தானம் மற்றும் யோகி பாபு குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியது, ஒரு நாள் தயாரிப்பாளர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. நடிகர் சந்தானம் பணம் கொடுத்தால் நடிப்பதாக இருந்தது. அப்போது நான் சந்தானத்திடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். சந்தானமும் இல்லை இல்லை நான் பணம் வாங்காமல் படம் நடித்து தருகிறேன். சூட்டிங்கானா ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறியிருந்தார். இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

- Advertisement -

இதையும் பாருங்க : நான் விர்ஜின், வேணும்னா டெஸ்ட் எடுத்து காமிக்காட்டா ? விடீயோவை தர்ஷனுக்கு டேக் செய்த மீரா.

அதே மாதிரி நடிகர் யோகிபாபு சினிமா உலகில் நுழைந்த காலத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்காக யோகி பாபு டப்பிங் பேச வேண்டும். ஆனால், தற்போது யோகிபாபு பிஸியாக படங்களில் நடிக்கிறார் என்பதற்காக மூன்று வருடங்களாக அந்த படத்திற்காக டப்பிங் பேசி தரவில்லை. அதனால் அந்த படமும் வெளிவர மிகவும் சிரமம் பட்டுக்கொண்டு இருக்கிறது. இது குறித்து யோகிபாபுவிடம் என்னை மாதிரி பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பேசிப் பார்த்தார்கள். இதோ வந்து செய்து தருகிறேன், பண்ணி தருகிறேன் என்று சொல்லி சொல்லி காலத்தை தள்ளுகிறார் தவிர இன்னும் வந்து சேரவில்லை. இப்போது கூட போனில் தொடர்பு கொண்டு பேசியபோது சுந்தர் சி படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் வந்து செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் எவ்வளவு பிசியாக வேண்டும் படங்களில் நடியுங்கள்.

-விளம்பரம்-

வீடியோவில் 10 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

ஆனால், ஆரம்பத்தில் நீங்கள் சினிமா உலகில் நுழைய காரணமானவர்களை மறந்துவிடாதீர்கள். அப்போது இந்த படங்கள் எல்லாம் உங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால், படங்கள் வாய்ப்பு வந்தவுடன் அந்தப் படங்களில் நடித்ததை மறந்து விடாதிர்கள். அந்த படத்திற்கான டப்பிங் வேலையை செய்து தந்தால் அந்த படம் வெளிவந்து வெற்றி பெற்றிருக்கும். மூன்று வருடங்களாக அந்த படம் வெளிவர சிரமப்பட்டு உள்ளது. ஆகவே நீங்கள் மீண்டும் சென்னை வந்தவுடன் முதல் வேலையாக இந்த படத்தின் டப்பிங் வேலையை செய்து விட்டு மீதி எந்த வேலை இருந்தாலும் செய்யுங்கள். இதை நான் இந்த மேடையில் ஒரு வேண்டுகோளாக தான் கேட்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement