காமெடி நடிகர் யோகி பாபு காதலுக்கு உதவி செய்த பிரபல நடிகை..!

0
2
Yoagibabu
- Advertisement -

பாலிவுட்டில் சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் வித்யா பாலன் நடித்து, கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம், `தும்ஹாரி சூலு’. இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் ரீமேக்கை ‘காற்றின் மொழி’ என்ற பெயரில் தமிழில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன்.

Kaatrinmozhi

ஜோதிகா லீட் ரோல் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கிறார்.வீட்டில் ஹவுஸ் வொய்ஃபாக இருக்கும் பெண், ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜே ஆகும் வகையில் இந்தப் படத்தின் கதையம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்திருப்பதைத் தொடர்ந்து நடிகர் யோகிபாபுவும் நடித்திருக்கிறார் என்பதை படக்குழு அறிவித்திருக்கிறது. ஆர்.ஜேவாக நடிக்கும் ஜோதிகாவுக்கு நிறைய பேர் போன் செய்து அவர்களின் காதலைப் பற்றி பேசுகின்றனர், அதில் ஒரு அழைப்பாளராக நடிகர் யோகிபாபுவும் பேசவிருக்கிறாராம்.

Yogibabu

அவருக்கு இருக்கும் காதல் பிரச்னைக்கு ஜோதிகா, எப்படி தீர்வு சொல்கிறார் என்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.யோகி பாபு தனது காதலில் வெற்றி பெற்றறாரா போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாம்.’போஃப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் நவம்பர் 16-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Advertisement