பேச்சு வாக்கில் ஜெயிலர் 2 குறித்த உண்மையை உலறிய நடிகர் யோகி பாபு – வைரலாகும் வீடியோ

0
608
- Advertisement -

ஜெயிலர் 2 படம் தொடர்பாக யோகி பாபு அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஸ்வேதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார். குறிப்பாக, இந்த படத்தில் நடிகர் யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகளும் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருந்தது. இந்த படம் குறித்து யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து இருந்தார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

அதோடு இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்தார் என்று சொல்லலாம். மேலும், இந்த படம் இதுவரை உலக அளவில் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருந்ததாக கூறப்பட்டது. ரஜினிகாந்த் திரை வாழ்க்கையிலேயே இந்த படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இதனால் பலரும், ஜெயிலர் 2 படம் வருமா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். அதற்கு ஏற்ப சமீபத்தில், ஜெயிலர் 2 படம் வரும், அதற்கான வேலைகளில் நெல்சன் ஈடுபட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது.

ஜெயிலர் 2 படம் அப்டேட்:

அதுமட்டுமில்லாமல் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும், இந்த முறை ரஜினிகாந்த் உடன் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு யோசித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஜெயிலர் 2 பற்றி யோகி பாபு சொன்னது:

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் யோகி பாபு, ஜெயிலர் 2 படத்திற்கான வேலைகள் தான் சென்று கொண்டிருக்கின்றது. இதிலும் காமெடி காட்சிகளை முக்கியமாக பார்த்து செய்கிறார் நெல்சன். இதெல்லாம் படக்குழுவினர் சொல்ல வேண்டியது. எப்படியோ பேசி விஷயத்தை வாங்கி நீங்கள், சோசியல் மீடியாவில் வெளியிட்டு விடுகிறீர்கள். அதற்கு பிறகு படக்குழுவினர் புலம்புகிறார்கள். இதனால் தான் நிறைய படங்கள் உடைய அப்டேட்களை பிரபலங்கள் சொல்வதில்லை என்று கூறியிருக்கிறார்.

யோகி பாபு குறித்த தகவல்:

இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக மொத்தம் ஜெயிலர் 2 படத்தில் யோகி பாபு நடிப்பதும், அதற்கான வேலைகள் சென்று கொண்டிருப்பதும் உண்மை என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக யோகிபாபு திகழ்ந்து கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து வந்த யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் கலக்கி கொண்டு வருகிறார்.

Advertisement