யோகி பாபுவிற்கு ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளமா ..!தெறித்து ஓடும் தயாரிப்பாளர்..!

0
1422

தமிழ் சினிமாவில் தற்போது முன்னனி காமெடி நடிகர் யார் என்றால் யோகி பாபுவை தான் அனைவரும் சொல்லுராகள். அந்த அளவிற்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் இவரிடம் தான் கால் சீட் கேட்டு வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றனர்.

தமிழில் தற்போதுள்ள சூரி, சதீஷ் போன்றவைகளின் காமெடியில் சற்று சலிப்பு ஏற்பட தனது பாடி லாங்குவேஜ் மற்றும் வித்யாசான கவுண்டர் மூலம் ரசிகர்களை தம் பக்கத்தில் வளைத்து வைத்துள்ளார் யோகி பாபு.

இதையும் படியுங்க : விஜய், அஜித், கவுண்டமணி ஆகியோர் குறித்து சுவாரசிய தகவளை சொன்ன யோகி பாபு..!

- Advertisement -

தற்போது விஜயின் 62, அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்து வரும் யோகி பாபு ‘கூர்கா’ படத்தில் முன்னணி ரோலில் நடித்து வருகிறார். அதுபோக 17 படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளாராம். தனது கிராக்கியை உணர்ந்த யோகி பாபு ஒரு படத்திற்கு 1 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டிறாராம்.

வரும் காமெடி ரோலுக்கே இவ்வளவு என்று தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகின்றனராம். ஆனால், இதுபற்றி யோகி பாபுவிடம் கேட்டால் ,ஆமாமா…  நானும் அந்த  வதந்திகளையெல்லாம் படிச்சேன். 3 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குறேன்னு எல்லாம் பேசிக்கிட்டிருக்காங்க. இதையெல்லாம் நம்பிடாதீங்க மக்களே என்று கிண்டலாக கூறுகிறார்.

-விளம்பரம்-
Advertisement