காமெடி கிங் யோகி பாபுவின் தனிப்பட்ட வாழ்கை பற்றி தெரியுமா??வியப்பில் ரசிகர்கள்..

0
3153

தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத் தான் வந்தவர்கள். அந்த வகையில் ஒருகாலத்தில் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டவர் யோகி பாபு. தற்போது யோகி பாபு இருந்தால் தான் படம் எடுப்போம் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்து உள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் தலைமுறைக்கு பின்னர் தற்போது முன்னணி காமெடியனாக விளங்கி வருவது நடிகர் யோகிபாபு தான் . தற்போது பெரும்பாலான ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. அதே போல தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குவதும் இவர் தான் என்று கூறப்படுகிறது.

இவர் தன்னுடைய கடந்த காலத்தில் பசி, பட்டினி, அவமானம், அசிங்கம் என எல்லாவற்றையும் சந்தித்து தான் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளார். இவர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அலைந்து திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய உருவத்தை பார்த்து பல பேர் கிண்டலும், கேலியும் செய்வார்கள். அதோடு இவர் எங்கு நடந்து போனாலும் இவரை பார்த்து குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு பயந்து செல்வார்களாம். அதோடு எங்கு பார்த்தாலும் இவரை கிண்டல், கேலி செய்து கலாய்ப்பார்களாம். இதனால் இவர் பல முறை இப்படி அசிங்கமாக பிறந்தது விட்டோமே என்று அழுந்து உள்ளார். பிறகு நண்பர்களின் நகைச்சுவை, ஆறுதல் தான் இவரை ஊக்கப்படுத்தியது.

- Advertisement -

நடிகர் யோகி பாபு அவர்கள் தன் நண்பர்களுடன் சேர்ந்து நிறைய நகைச்சுவை நிகழ்ச்சிகள் படப்பிடிப்புக்கு செல்லுவாராம். அப்போது தான் அங்கு உள்ள ஒரு இயக்குனர்கள் இவருடைய உருவத்தை பார்த்து நகைச்சுவைக்கு சரியாக இருப்பார் என்று படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு அவரையும், அவருடைய நகைச்சுவையையும் பார்த்து மக்கள் ரசிக்க ஆரம்பித்தார்கள். பின்னர் யாமிருக்க பயமேன் என்ற படத்தில் பன்னி மூஞ்சி வாயா என்ற டயலாக் மூலம் மிகப்பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து இவர் மான் கராத்தே, காக்கி சட்டை, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை என அனைத்து முன்னணி நடிகர்களும் இவர் தான் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு பிரபலம் அடைந்து உள்ளார். இவர் இல்லாமல் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று கூட நடிகர்கள் அடம் பிடிக்கிறார்களாம். அந்த வகையில் அனைவரிடமும் நல்ல முறையில் பழகி உள்ளார். தன்னை ஏமாற்றியவர்கள் கூட மதிக்கும் குணம் உடையவர் யோகிபாபு. தன்னுடைய வாழ்க்கையில் இரவும் பகலும் என்று பார்க்காமல் நடித்துக் கொண்டதனால் தான் இந்த அளவிற்கு வாழ்வில் உயர்ந்து உள்ளார். கொஞ்சம் பெயர்,புகழ் வந்துவிட்டாலே தலைக்கனம் கொண்டு ஆடுபவர்களின் மத்தியில் இவர் என்றும் தன் நிலையை மறக்காமல் எளிமையாக வாழ்பவர்.

-விளம்பரம்-
Advertisement