தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் யோகி பாபு அவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என தெரிய வந்து உள்ளது. தற்போது இந்த நியூஸ் தான் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி காமெடியனாக யோகி பாபு திகழ்ந்து வருகிறார். இவர் மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். நடிகர் சந்தானத்தை போலவே யோகி பாபுவும் நகைச்சுவையில் திகழ்ந்து தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு இவர் காமெடி கிங்காக திகழ்ந்து வருகிறார். ரஜினிகாந்த், விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் யோகி பாபு குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன. அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், அவர் நடிகை ஒருவரை காதலித்து வருகிறார் என்றும் பல்வேறு வதந்திகள் வந்தன. ஆனால், அதெல்லாம் உண்மையில்லை என்றும் அவர் கூறி உள்ளார். அதோடு நடிகர் யோகி பாபு திருமணம் இன்னும் சில வாரங்களில் நடைபெறும் என்ற செய்திகள் இணையங்களில் வைரலாக பரவியது. ஆனால், அது உண்மையில்லை என அவர் தர்பார் படம் இசை வெளியீட்டு விழாவில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. தர்பார் படம் இசை வெளியீட்டு விழாவில் யோகி பாபு கலந்து கொண்டு மேடையில் பேசினார்.
இதையும் பாருங்க : நான் படிக்க வேண்டும்,ஆனால், முடியவில்லை. ரசிகர்களிடம் உதவி கேட்ட அனிகா.
அப்போது விஜே ரம்யா உங்களுடைய திருமணம் எப்போது என யோகி பாபுவிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் கூறியது, நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. என் கல்யாணம் தான் உங்களுக்கு முக்கியமாக தெரியுதா? நான்கு ரூபாயில பாட்ஷா படத்தை பார்த்தவர்களில் நானும் ஒருவன். தற்போது அவர் உடனே படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் சொல்லலாம். என்னுடைய கல்யாணம் சீக்கிரம் நடக்கும். ரஜினி சாரே யோகி பாபு உங்களுக்கு தை மாசம் கல்யாணம் நடந்து முடிந்திடும் என சொல்லிட்டாரு என்று ஆனந்தமாக கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யோகி பாபு நடிகை ஒருவருடன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. மேலும், அந்த பெண்ணை தான் யோகி பாபு திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்பட்டது. இந்த விஷயம் சமூக வலைதளத்தில் தீயாக பரவ பத்திரப்போன யோகி பாபு தனது சமூக வலைதளத்தில் தனது திருமணம் குறித்து விளக்கமளித்தார். அதில், என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன் என்று குறிப்பிட்டுருந்தார்.