நான் படிக்க வேண்டும்,ஆனால், முடியவில்லை. ரசிகர்களிடம் உதவி கேட்ட அனிகா.

0
91200
babyanika
- Advertisement -

சினிமா உலகில் பல ஆண்டு காலமாகவே பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள். பேபி ஷாலினி தொடங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் அடைந்துள்ளார்கள். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்கள் மூலம் தல அஜித் குமாருக்கு மகளாக நடித்த அனிகா ரசிகர்கள் மத்தியில் பயங்கர பிரபலமடைந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகை அனிகாவுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம். இந்நிலையில் அனிகா அவர்கள் தற்போது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் அதிர்ந்து போய் உள்ளார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

இதனைத்தொடர்ந்து நடிகை அனிகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது, நான் படிப்பதற்கு பதிலாக என் அம்மாவுடன் ஆழமான பேச்சு வார்த்தை ஒன்றை நடத்தினேன். அது மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. உண்மையாகவே நான் படிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், என்னால் படிக்க முடியவில்லையே. எனக்கு உதவி செய்யுங்கள் என்று சோகமான பதிவை இட்டு அதோடு தன்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்களும் பல கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் பாருங்க : இந்த நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன். ட்விட்டரில் ஓப்பனாக தெரிவித்த ரைசா.

நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். மேலும், நடிகை அனிகா அவர்கள் மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிக ஆதரவை பெற்று வருகிறார். இதன் பின் தான் இவர் தமிழில் நடிக்க தொடங்கினார்.

-விளம்பரம்-
baby anikha க்கான பட முடிவு

இதனை தொடர்ந்து நடிகை அனிகா மிருதன், நானும் ரவுடிதான், விசுவாசம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார். மேலும், தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அனிகா அவர்கள் விசுவாசம் படத்தின் மூலம் அஜித்துக்கு மீண்டும் மகளாக நடித்தார். இந்த படத்தில் இவர்கள் இருவருடைய சென்டிமென்ட் பார்ப்போர் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. மேலும், ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் இவர்களுடைய கதா பாத்திரம் மிக ஆழமாக பதிந்தது. அதுமட்டுமில்லாமல் விசுவாசம் படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 60 வது படம் அதாவது வலிமை படத்திலும் மீண்டும் அனிகா நடிக்க உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

மேலும், அவர் மூன்றாவது முறையாக தல அஜித்துடன் நடிக்கிறார் என்று ரசிகர்கள் பயங்கர குஷியாகி உள்ளார்கள். மேலும் அனிகா நடித்த “மா” என்ற குறும்படம் சுமார் 4.5 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்க வைத்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த குறும்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது கூட என்று சொல்லலாம். இந்நிலையில் சமீபகாலமாக நடிகை அனிகா அவர்கள் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப் படங்களை போட்டு வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் உங்களை நாங்கள் அஜித் மகளாக தான் பார்க்கிறோம். இப்படியெல்லாம் செய்யாதீர்கள் எனவும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள். இது இணையங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement