யோகி பாபுவின் ரிப்பீட் ஷூ படம் எப்படி இருக்கு ? – முழு விமர்சனம் இதோ.

0
1986
- Advertisement -

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரிப்பீட் ஷூ. இந்த படத்தில் யோகி பாபு, திலீபன், ரெடிங் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா, ப்ரியா போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்து இருக்கிறார். டைம் டிராவல் கான்செப்டில் இந்த படம் உருவாகிறது. இன்று வெளியாகியுள்ள ரிப்பீட் ஷூ படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் நாயகன் திலீபன் அவர்கள் ஒரு டைம் ட்ராவல் மெஷினை பொருத்திய ஷூ ஒன்றை தயாரிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக போலீசுக்கும் இவருக்கும் இடையே ப்ரச்சனை ஏற்படுகிறது. அதில் துப்பாக்கி கொண்டு நாயகன் திலீபன் கழுத்தில் பாய்கிறது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அது மட்டும் இல்லாமல் தாம் கண்டு பிடித்த டைம் டிராவல் சூவை திலீபன் ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு செல்கிறார்.

- Advertisement -

திலீபன் மறைத்து வைத்திருந்த ஷூ, செருப்பு தைக்கும் தொழிலாளி ஆன அந்தோணி தாசனின் மகளாக வரும் பிரியாவிடம் சிக்குகிறது. அவரிடம் இருந்து யோகி பாபுவின் கைக்கு அந்த ஷூ செல்கிறது. ஷூ வந்த நேரம் யோகி பாபு உடைய வாழ்க்கையே மாறுகிறது . யோகி பாபு அடுத்த கட்டத்திற்கு செல்கிறார் என்றே சொல்லலாம். இதற்கிடையில் 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி வருகிறது ஒரு கும்பல்.

படத்தின் கதை:

அந்த கும்பலிடம் குடிகாரரான அந்தோணி தாசன் தன்னுடைய மகள் பிரியாவையும் விற்று விடுகிறார்.
இந்த நிலையில் பிரியாவின் வாழ்க்கை என்னானது? கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டார்களா? இறுதியில் இந்த ஷூவை திலீப் கைப்பற்றினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை சுற்றி கதை நகர்கிறது. டைம் டிராவல் கான்செப்டில் தமிழ் திரை உலகில் எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது.

-விளம்பரம்-

பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு:

ஆனால், இந்த படத்தில் ஷூ வில் டைம் ட்ராவல் மெஷினை வைத்து வித்தியாசமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். டெக்னிக்கலாக இந்த படத்தை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் கல்யாண். படத்தில் யோகி பாபு, ரெடீன், பாலா காட்சிகள் எல்லாம் அருமையாக வந்திருக்கிறது. பெண் குழந்தைகளை கொடுமைப்படுத்தும் காட்சிகளும், பாலியல் கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை கொடுக்கும் படமாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.

ஆனால், திலீபனின் காட்சிகள் பெரிதாக ஒன்றும் இல்லை. படம் முழுக்க பிரியாவுடைய கதாபாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து வைத்திருக்கலாம். சாம் சி எஸ் இசை படத்திற்கு பலமாக இருக்கிறது. மொத்தத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி படத்தில் எந்த ஒரு மாற்றங்களோ, சுவாரசியமோ இல்லை.

பிளஸ்:

வழக்கமான டைம் டிராவல் கதை.

பெண் குழந்தைகளுக்கு ஆன ஒரு விழிப்புணர்வு கதை.

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக உள்ளது.

மைனஸ்:

கதையில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம்.

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

காமெடி காட்சிகள் எதுவும் பெரிதாக செட் ஆகவில்லை.

நடிகர்களுடைய கதாபாத்திரத்தை இன்னும் நன்றாக காண்பித்திருக்கலாம்.

மொத்தத்தில் ஷூ படம்- நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா என்பதை பார்க்கலாம்.

Advertisement