வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த நடிகர் பாலா தன்னுடைய காதல் மனைவியை விவாகரத்து செய்து உள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த நியூஸ் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது என்றும் சொல்லலாம். நடிகர் பாலா அவர்கள் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். பின் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளார். பின் சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை என்றவுடன் மலையாள மொழிக்கு சென்று விட்டார்.
நடிகர் பாலா மலையாள மொழி படங்களில் முன்னணி நடிகராக இருந்து வந்தார். சமீபத்தில் தான் இவர் அஜித் நடிப்பில் வெளி வந்த ‘வீரம்’ படத்தில் அஜித் தம்பிகளில் ஒருவராக நடித்தார். இந்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தான் இவருடைய அண்ணன். நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவை ரொம்ப காலமாக காதலித்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர்களுடைய மணவாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்த பின்னர் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வந்து உள்ளது. சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு அம்ருதா அவர்கள் அவருடைய தந்தை வீட்டிற்கு குழந்தையை அழைத்துக் கொண்டு சென்று விடுவாராம்.
இதையும் பாருங்க : ஹீரோவா இருந்து என்ன பிரயோஜனம். வெளுத்து வாங்கிய வனிதா. வைரலாகும் வீடியோ.
சில வருடங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. பின் 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்தார்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய சண்டை குறித்தும், பிரச்சினை குறித்தும் வெளியில் காட்டாமல் இருந்தார்கள். இவர்களுக்கு சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பின் இருவரும் முடிவு செய்து தான் விவாகரத்து செய்தார்கள் என்ற தகவல் வெளிவந்தது. அதுமட்டும் இல்லாமல் இருவரும் குடும்ப விஷயங்கள் பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என்றும் முடிவு செய்து இருந்தார்கள். இவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட்டார்கள். பின் இந்த வழக்கில் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு விவாகரத்து வழங்கி உள்ளது.
மேலும், குழந்தை அவந்திகா அம்மா உடன் தான் இருப்பார் என்றும் கூறி உள்ளார்கள். இந்நிலையில் தற்போது நடிகர் பாலா அவர்கள் தன் காதல் மனைவி அம்ருதாவை பிரிந்து விட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். மேலும், நாங்கள் விவாகரத்தும் செய்து கொண்டோம் என்று நடிகர் பாலா பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, எங்கள் விவகாரத்து சம்மந்தமாக நான் யாரையும் குறை கூறவில்லை. பிரிவுக்கான காரணம் பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார். இதை கேட்டு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.