ஒரு காலத்துல நானும் இப்படி இருந்தேன்.! யோகி பாபு வெளியிட்ட புகைப்படம்..!

0
712
yogi-babu-actor

தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடின, அந்த பூரிப்பில் இவரது உடல் எடையும் கூடி கொண்டே வந்தது. இதனால் தற்போது மிகவும் உடல் எடை கூடி குண்டாக உள்ளார் யோகி.

சமீபத்தில் நடிகர் யோகி பாபு சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அவருடைய பழைய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் பார்ப்பதற்கு சற்று ஒல்லியாகவே இருக்கிறார் நடிகர் யோகி பாபு . இதனால் அந்த புகைப்படத்தில் ‘நானும் ஒல்லிதான் ஒரு காலத்துல’ என்று கிண்டலாக கேப்ஷன் ஒன்றையும் எழுதியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை செல்லமாக கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிஸியான காமெடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு சினிமாவில் வருவதற்கு முன்னாள் ‘லொள்ளு சபா ‘ நிகழ்ச்சியில் நடித்து வந்தார். அதுபோக ஒரு சில தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். தற்போது யோகி பாபு வெளியிட்டுள்ள இந்த புகைப்படமும் எதோ ஒரு தொலைக்காட்சி தொடரில், அவர் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் போன்று தான் தோன்றுகிறது.

மேலும், தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி யோகி பாபு தற்போது அஜித் நடித்து வரும் ‘விசுவாசம் ‘ படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 100 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்த இவர் தற்போது மீண்டும் அவருடன் ‘சர்கார்’ படத்திலும் இணைந்துள்ளார்.