ஆஸ்கர் விருது: பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் திரைப்படம் (ஒரே தமிழ் படம் இதான்)

0
1241
Yogi-Babu
- Advertisement -

ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் யோகி பாபுவின் ‘மண்டேலா’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த படம் மண்டேலா’. இந்த படத்தில் ஷீலா, சங்கிலி முருகன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் தொலைக்காட்சியில் நேரடியாக இந்த படம் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-
Mandela | Netflix

பின் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாகவே ஆண்டுதோறும் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு ஒரு திரைப்படம் அனுப்பப்படுவது வழக்கமான ஒன்று தான். இதற்காக தேசிய அளவில் பல மொழி திரைப்படங்கள் போட்டி போட்டுக் கொண்டு வரும்.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக வித்யா பாலன் நடித்த ‘ஷெர்னி’, விக்கி கவுஷல் நடித்த ‘சர்தார் உதம்’, மலையாளத்தில் மார்ட்டின் ப்ரகத் இயக்கிய ‘நாயாட்டு’ உள்ளிட்ட 14 படங்கள் தேர்வாகியுள்ளது. இதில் தமிழில் நம்ப யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படமும் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த 14 படங்களில் இருந்து ஒரு படத்தை இயக்குநர் ஷாஜி என். கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்வார்கள். அந்த ஒரு படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக அனுப்பி வைக்கப்படும். இந்த 14 படங்களில் எந்த படம் ஆஸ்கர் விருதுக்கு செல்லப் போகிறது என்றும், அதில் யோகி பாபுவின் ‘மண்டேலா’ படம் இருக்குமா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Image

மேலும், இதுகுறித்து நடிகர் யோகிபாபு விடம் கேட்டபோது அவர் கூறியது, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு காமெடி நடிகரின் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு. இதற்கெல்லாம் மக்கள் கொடுத்த வரவேற்பு தான் காரணம். ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போது யோகி பாபுவின் மண்டேலா படம் ஆஸ்கருக்கு தேர்வானதைத் தொடர்ந்து ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement