ட்ராப் செய்யப்பட்ட படத்தில் நடிக்கிறாரா விஜய்..! பிரபல இயக்குனர் விளக்கம்

0
607
vijay

இளையதளபதி விஜய் இதுவரை தமிழில் பல வெற்றி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தது இல்லை. இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியாக இருந்த “யோகன் அத்யாயம் ஒன்று” என்ற படமும் கை விடபட்டது.

vijay

இந்த படத்தின் சில தகவல்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான, மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியான நிலையில் இந்த படம் திடீர் என்று கைவிடப்பட்டது. சமீபத்தில் இந்த படம் கைவிடபட்டது குறித்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன் இந்த படத்தின் முழு கதையை விஜய்யிடம் தாம் கூறவில்லை என்று தெரிவித்துளளார்.

சமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் மேனன் “நடிகர் விஜய் முழு கதையை கேட்ட பின்னரே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார். ஆனால், இந்த படத்தின் ஒன் லைன் கதையுடன் படத்தின் 75 சதவீத கதையை மட்டுமே நான் விஜய்யுடன் கூறினேன். அதனை கேட்ட விஜய் இந்த படத்தின் முழு கதையை தயார் செய்து பின்னர் சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.

Gautham-Vasudev-Menon

ஆனால், நான் இந்த படத்தின் முழு கதையை முடிக்க கால தாமதம் செய்துவிட்டேன். அதனால் தான் இந்த படம் கைவைப்பட்டது. விரைவில் இந்த படத்தின் முழு கதையையும் முடித்துவிட்டு விஜய்யிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துளளார். எனவே, நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணியில் விரைவில் ஒரு படம் வெளியாகினாலும் ஆச்சர்யமில்லை.