தந்தைக்காக தனது உடல் உறுப்பை தானம் செய்த இளம் இயக்குனர். அப்படி என்ன கொடுத்துள்ளார் பாருங்க.

0
1195
Adhin Ollur
- Advertisement -

மலையாள சினிமாவில் இளம் இயக்குனராக வளர்ந்து வருபவர் ஆதின் ஒல்லூர். தற்போது இவர் செய்த செயல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஆதின் ஒல்லூரின் தந்தை உடல் நலமில்லாமல் இருந்து உள்ளார். இந்நிலையில் இயக்குனர் ஆதின் தந்தைக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. உடனே மருத்துவர்கள் கல்லீரலில் அறுவை சிகிக்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். உடனே இயக்குனர் ஆதின் ஒல்லூர் அவர்கள் தனது கல்லீரலை தன் தந்தைக்கு தானாமாக கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

?✌?അഭിമാനമല്ല ഭാഗ്യമാണ് , കടമയാണ്…..i think This is The Right Time to Inform you Guys That I Got A Lucky Super…

Adhin Ollur ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಮೇ 25, 2020

இந்த செய்தியை அவரே தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனது தந்தைக்கு கல்லீரல் கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. கடந்த மே 18-ஆம் தேதி என் தந்தைக்கு ஆபரேஷன் நடந்தது. இப்போது இருவரும் நலமாக உள்ளோம்.

இதையும் பாருங்க : பிரபல நடிகை பாபிலோனா சகோதரருக்கு அரிவாள் வெட்டு. வீட்டுக்குள் புகுந்து 8 பேர் வெறிச்செயல்.

- Advertisement -

நான் இன்று தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். எனது தந்தையும் சீக்கிரமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். என் நண்பர்களுடைய பிராத்தனைகளுக்கு நன்றி. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் எனது மனதார நன்றிகள் என்று கூறியுள்ளார். இவர் பதிவிட்ட கருத்தும்,புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

சொந்த தந்தைக்கு கல்லீரலை கொடுத்த இயக்குனரின் பாசம் மலையாள ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் ஆதின் ஒல்லூர் “Pennanveshanam” என்ற படத்தை இயக்கி உள்ளார். கொரோனா ஊரடங்கு தொடங்கிய காலகட்டத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது

-விளம்பரம்-
Advertisement