தனுஷ் பட வசனத்தால் கடுப்பான எஸ்.ஐ – தற்கொலைக்கு முயன்ற இளைஞர். என்ன காரணம் பாருங்க.

0
706
dhanush
- Advertisement -

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போனில் தனுஷ் படத்தின் போலீஸ் காட்சி குறித்த ஸ்டேட்டஸ் வைத்ததற்கு போலீஸ் அதிகாரி வாட்ஸப்பில் மிரட்டிய சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் போல ரசிகர்களும் செய்வது வழக்கமான ஒன்று. அவர்களைப்போல நடனமாடுவது, டயலாக் பேசுவது, பாட்டு பாடுவது என தனக்கு பிடித்த நடிகர்கள் செய்யும் விஷயத்தை ரசிகர்களும் நிஜவாழ்க்கையில் செய்கிறார்கள். அந்த வகையில் பல விஷயங்கள் நன்மையில் முடிந்தாலும் சில விஷயங்கள் பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தனுஷ் படத்தின் டயலாக் மூலம் கோவை இளைஞன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் நவீன் பிரசாத். இவர் தன்னுடைய நண்பர்களுடன் கடந்த 22ஆம் தேதி தன்னுடைய நண்பரின் பிறந்த நாளுக்காக கேக் வெட்ட சாலையில் காத்திருந்தனர். அப்போது Patrol ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் பொது இடத்தில் வைத்து கேக் வெட்ட கூடாது. வீட்டுக்குப் போக முடியாதா? என்று மிரட்டி இருக்கிறார்கள்.

- Advertisement -

இளைஞர் வைத்த தனுஷ் பட ஸ்டேட்டஸ் :

அதற்கு அந்த இளைஞர்கள் போலீஸ்ஸை எதிரித்து பதில் பேசி இருக்கிறார்கள். பின் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகுஅந்த இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இதனையடுத்து நவீன் பிரசாத் என்ற இளைஞர் தனுஷ் படத்தின் வசனத்தை ஸ்டேட்டஸ் ஆக தன்னுடைய செல்போனில் வைத்து இருந்தார். நவீன் வைத்திருந்த ஸ்டேட்டஸில், போய் அந்த போலீஸ்காரண்ட்ட சொல்லு, நான் இங்க தான் இருப்பேன்னு சொல்லு. இந்த ஏரியாவே அவன் கண்ட்ரோல்ல இருக்கலாம். ஆனா, மாறி எப்பவுமே அவுட் ஆப் கண்ட்ரோல்ன்னு போய் அந்த போலீஸ்காரர் கிட்ட சொல்லு

கோபத்தில் போலீஸ் செய்த செயல்:

நான் இங்க தான் இருப்பேன் என மாறி படத்தின் டயலாக்கை வைத்து இருந்தார். இதை பார்த்த நவீன் பிரசாத்தின் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் இதை சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தும், ஆதாரத்தையும் அனுப்பி இருந்தார். இதனை கண்டு கோபமடைந்த உதவி ஆய்வாளர் சையத் அலி உடனடியாக நவீன் பிரசாத்துக்கு வாட்ஸப் மூலம் வாட்ஸப் கால் செய்து இருக்கிறார். பின்தொடர்ந்து ஏரியாவுக்கு வருகிறேன், வாடா நீ என தெரிவித்து கெட்ட வார்த்தையில் அந்த இளைஞனை மிரட்டியுள்ளார் உதவி ஆய்வாளர் சையத் அலி. அப்போது நவீன் பிரசாத், நீங்கள் யார் என கேட்டபோது? எஸ்.ஐ. டா என தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

பயத்தில் நவீன் செய்த காரியம்:

மேலும், இவை அனைத்துமே நவீன் பிரசாத் நண்பர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பின் நவீன் பிரசாத் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சாணி பவுடரை குடித்து விட்டார். தற்போது சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து இளைஞர் நவீனை பிரபல சேனல் பேட்டி எடுத்தபோது அதில் அவர் கூறியிருப்பது, எங்கள் ஏரியாவில் நண்பர் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட நண்பர்கள் நான்கு பேர் காத்திருந்தோம். அப்போது Patrol ரோந்தில் வந்த போலீசார் இரவு நேரத்தில் இருக்க கூடாது என்றும், கேரம்போடை உடைத்து விடுவோம் என்றார்கள்.

இளைஞர் நவீன் அளித்த பேட்டி:

பின் எங்கள் சட்டையை பிடித்து தள்ளிவிட்டார்கள்.நாங்கள் பிரச்சினை முடிந்து சென்றுவிட்டோம். அடுத்த நாள் நான் தனுஷ் படத்தின் மாறி ஸ்டேட்டஸ் வைத்தேன். இதையடுத்து இரவு உதவி ஆய்வாளர் போன் செய்து என்னை தூக்கி விடுவேன் என்று மிரட்டினார். பிறகு 3 மணிக்கு மீண்டும் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. மேலும், என்னை காவல் நிலையத்திற்கு வர சொன்னார்கள் அடுத்து என் அம்மா அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து என்ன செய்வது? என்று புரியாமல் தான் நான் சாணி பவுடர் சாப்பிட்டு விட்டேன் என்று கூறி இருக்கிறார். இப்படி தனுஷ் பட காட்சியால் இளைஞர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது

Advertisement