மத்தவங்களுக்கு வந்தா ரத்தம்.! உங்க கணவருக்கு வந்தா தக்காளி சட்னியா.! என்ன இதெல்லாம்.!

0
634
Chimayi

வைரமுத்து மீது பாலியில் குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பின்னணி பாடகி சின்மயி. சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராகுல் ரவிந்தரன் தமிழில் 2010 ஆம் ஆண்டு ‘மஸ்கொவின் காதலி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் தமிழ், தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்துள்ள ராகுல் ‘ச்சி லா சௌ ‘ என்ற தெலுங்கு படத்தையும் இயக்கி இருந்தார்.

‘ச்சி லா சௌ ‘ படத்தை தொடர்ந்து ராகுல் ரவீந்திரன் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவை நடித்துள்ள ‘மன்மதடு 2’ என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் முதல் பாகம் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடைந்தது. தற்போது இந்த மன்மதடு 2 படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலரில் நாகர்ஜுனா இளம் பெண் ஒருவருக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் மகள் வயது நடிகைக்கு நாகர்ஜுனா முத்தம் கொடுப்பதா என்று முனுமுனுத்து வந்தனர். இந்த நிலையில் தனது கணவர் இயக்கிய இந்த படத்தின் ட்ரைலரை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Image result for manmadhudu 2

இதனை கண்ட ரசிகர் ஒருவர் கடந்த சில மாதத்திற்கு முன்னர் சின்மயி பகிர்ந்த ட்வீட் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த டீவீட்டில் பாடகி சின்மயி ‘இந்திய நடிகர்கள் தங்களது மகள்களை விட சிறிய வயது நடிகையை தான் தனது படங்களில் நடிக்க வைக்கிறார்கள். இது எப்போது நிறுத்தப்படும்’ என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தனது கணவர் படத்தில் மட்டும் மகள் வயது நடிகையை நாகர்ஜூனாவிற்கு ஜோடியாக்கி உள்ளார் சின்மயி என்று கமெண்ட் செய்துள்ள அந்த ரசிகர். இப்போது இதற்க்கு சரியான பதில் சொல்லுங்கள் சின்மயி என்று ட்வீட் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள சின்மயி ‘படம் வெளியான பின்னர் அதற்கு விடை தெரியும். அது வரை உங்கள் வேலையை பாருங்க ‘ என்று ட்வீட் செய்துள்ளார்.