பிரபல நடிகர் சென்ற கார் மோதி வாலிபர் உயிரிழப்பு ! புகைப்படம் உள்ளே !

0
2275
jagan

திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் சின்ன திரையில் தொகுப்பாளராகவும் இருந்து வருபவர் ஜெகன். நேற்று 19ஆம் தேதி இரவு வந்தவாசி அருகில் இருவருடைய கார் மோதியதில் 25 வயது இலைஞர் உசேன் மரணம் அடைந்துள்ளார்.

actor jagan

வந்தவாசி அருகில் உள்ள தாளம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சாதிகபாட்சா. இவருடைய மகன் உசேன். இவருக்கு 25 வயதாகிறது. நேற்று இரவு வந்தவாசிக்கு சென்றுவிட்டு தனது ஊருக்கு பைக்கில் வந்த கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னாள் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று வளைவில் திடீரென திரும்பியது. இதனை சற்றும் எதிர்பாராத உசேன் அந்த காரின் மீது மோதி தூக்கி வீசபட்டு பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அங்கு வந்த ஆம்புலன்ஸ் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால் பலத்த காயமடைந்த உசேன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

hussain

பின்னர் அந்த காரை பிடித்த விசாரித்ததில் அது நடிகர் ஜெகனுடை கார் என்பது தெரியவந்தது. இதனால் தற்போது வந்தவாசி காவல் நிலையத்தில் ஜெகன் மற்றும் உடனிருந்த அவரது நண்பர்களை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.