அருந்ததி படத்தை 100 முறை பார்த்துவிட்டு, மறு பிறவி எடுக்க நினைத்து கல்லூரி மாணவன் செய்த விபரீத செயல் – உயிர் போன சோகம்.

0
310
anushka
- Advertisement -

அனுஷ்காவின் அருந்ததி படம் பார்த்து மறுபிறவி எடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவன் தீக்குளித்து இறந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.பிரபலமானார். அதன் பின்னர் இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், அனுஷ்காவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த படங்களில் ஒன்று அருந்ததி.

-விளம்பரம்-

இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இந்த படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தை கொடி ராமகிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அனுஷ்கா செட்டி உடன் சோனு சூத், சாயாஜி சிண்டே உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இந்த நிலையில் அருந்ததி படம் பார்த்து அனுஷ்கா மாதிரியே மறுபிறவி எடுக்க போறேன் என்று கல்லூரி மாணவன் செய்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : நயன் லுக்கில் ஆர்த்தி போட்ட புகைப்படம் – விக்னேஷ் சிவன் போட்ட கமண்ட்டால் வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

ரேணுகா பிரசாத் குறித்த தகவல்:

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் மதுகிரி வட்டம் கொண்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா பிரசாத். இவருக்கு 22 வயது ஆகிறது. இவர் பி.யு.சி. 2-ம் ஆண்டு படித்து இருந்தார். மேலும், இந்த மாணவன் திரைப்படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போலவே தன்னை நினைத்துக் கொள்ளும் வழக்கமும் உடையவர். இதேபோல் இவர் பல கதாபாத்திரங்களை விரும்பி அதேபோல் செய்தும் காட்டியிருக்கிறார்.

-விளம்பரம்-

மறுபிறவி எடுக்க ரேணுகா பிரசாத் செய்தது:

இந்த நிலையில் சமீப காலமாகவே இவர் அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருந்த அருந்ததி திரைப்படத்தை 100 முறைக்கு மேல் பார்த்து இருக்கிறார். அந்த படத்தில் அனுஷ்கா மறுபிறவி எடுப்பதற்காக தலையில் தேங்காயால் அடிக்கச் சொல்லி உயிரை விட்டுவிடுவார். அதன் பின்னர் அனுஷ்கா மறுபிறவி எடுத்து வருவார். இந்த நிலையில் அனுஷ்காவை போல உயிரிழந்து மறுபிறவி எடுக்க வேண்டும் என்று நினைத்து ரேணுகா பிரசாத் தன்னுடைய உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து இருக்கிறார். இதை அறிந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

கல்லூரி மாணவன் தீக்குளித்த சம்பவம்:

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும், சிகிச்சை பலனில்லாமல் ரேணுகா பிரசாத் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மறுபிறவி எடுப்பதாக நினைத்து கல்லூரி மாணவன் தீக்குளித்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இறப்பதற்கு முன்பு அந்த மாணவன் பேசியிருக்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.

தந்தை, மகன் பேசியிருக்கும் காணொளி:

அதில் அவர் தந்தையிடம் முக்தி கொடுங்கள், முக்தி கொடுங்கள். நான் மறுபிறவி எடுப்பதற்கு முக்கி கொடுங்கள் என்று கெஞ்சுகிறார். அவருடைய நிலையை பார்த்து மாணவனின் தந்தையும் கண்ணீர் விட்டு அழுது, நான் உன்னை அருந்ததி படம் பார்க்க வேண்டாம் என்று சொன்னேன். என் பேச்சை நீ கேட்கவே இல்லை. நான் எப்படி உனக்கு முக்தி கொடுக்க முடியும் என்று கதறி அழுதிருக்கிறார். இப்படி தந்தை, மகன் பேசியிருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement