கெத்து காட்டுவதாக நினைத்து பதிவிட்ட வீடியோ – வீட்டுக்கே சென்று தூக்கிய வனத்துறை

0
65
- Advertisement -

யூடியூப்பில் பாம்பை அடித்துக் கொன்று வீடியோ வெளியிட்ட இளைஞரை வனத்துறை கைது செய்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை என பலருமே சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் புதிது புதிதாக செயலிகளையும் அறிமுகம் படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் யூடியூப், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோக்களை பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். ஏதாவது ஒரு வீடியோவை போட வேண்டும் என்று மக்களும் கேலி கிண்டலுக்கு உள்ளாகும் வகையில் எல்லாம் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

யூடியூபர் ஆன்டி குறித்த தகவல்:

அந்த வகையில் யூடியூபர ஒருவர் பாம்பை அடித்துக் கொன்று போட்டிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மலையாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டி. இவருடைய மகன் மெய்ஞான செந்தில்குமார். இவருக்கு 28 வயதாகிறது. இவர் யூடியூப், இன்ஸ்டாகிராமில் ஏதாவது ஒரு வீடியோக்களை பதிவிட்டு கொண்டே இருப்பார்.

பாம்பை அடித்து கொன்ற சம்பவம்:

ரொம்ப பெருமையா இருக்கு என்ற பெயரில் தான் இவர் வீடியோக்களை பதிவிட்டு தன்னை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி இவருடைய ஊருக்குள் பாம்பு ஒன்று நுழைந்திருந்தது. அந்த பாம்பை அவர் கட்டை எடுத்து அடித்து கொன்று இருந்தார். அதோட அந்த பாம்பு கட்டுவிரியன் என்று கூறி வீடியோ எடுத்து அதை அவருடைய சேனலில் பதிவு செய்திருந்தார்.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து கீரனூர் சரக வனத்துறை அதிகாரிகளும் இதை பார்த்து இருக்கிறார்கள். பின் அதிகாரி பொன்னம்மாள் தலைமையில் நேற்று மெய்ஞான செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்போது விசாரணையில் பாம்பை அடித்து கொன்றதை செந்தில்குமார் ஒத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அது விஷம் இல்லாத தண்ணீர் பாம்புதான், கட்டுவிரியன் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

நீதிமன்றம் உத்தரவு:

இதனை அடுத்து விஷம் இல்லாத தண்ணீர் பாம்பை அடித்து கொன்று வீடியோ வெளியிட்ட குற்றத்திற்கு வனத்துறையின் வனவிலங்கு சட்டம் 1972 பிரிவின் கீழ் மெய்ஞான செந்தில்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருக்கிறது. இதை அடுத்து நீதிமன்றம், செந்தில்குமாரை வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது. இதனால் செந்தில்குமாரை புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் கீரனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement