நயன்தாரா பட இயக்குனரை பிரபல யூடியூப் நடிகை கரம் பிடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. இதனால் புதிய செயலிகளை உருவாக்கி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவின் மூலம் பல பேருக்கு சினிமாவில் வாய்ப்புகளும், சம்பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகரித்து இருக்கிறது.
அந்த வகையில் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இருப்பது youtube. இதில் பலர் தனியாக சேனல்களை உருவாக்கி ஷார்ட் பிலிம், சமையல், மருத்துவம், காமெடி போன்ற பல வீடியோக்களை பதிவிட்டு மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் சேனலில் ஒன்று தான் பிளாக் ஷீப். ஆரம்பத்தில் சிறிதாக இந்த சேனல் தொடங்கப்பட்டாலும் தற்போது பெரிய அளவு வளர்ந்து இருக்கிறது.
பிளாக் ஷீப் சேனல்:
மேலும், டிஜிட்டல் துறையில் பெரிய அளவில் வளர்ந்து சாதிப்பவர்களுக்கு விருது கொடுக்கும் வகையில் இந்த சேனல் உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சேனலுக்கு பிராண்ட் அம்பாசிடராக வடிவேலு வரும் அளவிற்கு பிரபலமாக இருக்கிறது. இந்த சேனலில் ‘இவள்’ நந்தினி என்ற தலைப்பில் பெண்களின் முக்கியத்துவத்தை கொடுக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்கள். அதன் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நந்தினி.
நந்தினி குறித்த தகவல்:
இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவருடைய நடிப்பால் மக்களை கவர்ந்திருக்கிறார். இதனால் இவருக்கு சினிமா வாய்ப்பும் வந்தது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த டியர் என்ற படத்தில் நந்தினி நடித்திருந்தார். தற்போதும் இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நந்தினி, நயன்தாரா பட இயக்குனரை கரம் பிடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டியூட் விக்கி குறித்த தகவல்:
அதாவது, பிளாக் ஷீப் சேனலில் பயணித்து வந்த நபர்களில் ஒருவர் தான் டியூட் விக்கி. இவர் பிளாக் ஷீப் நிறுவனத்தில் எழுத்தாளராக இருந்தார். தற்போது இவர் மண்ணாங்கட்டி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இவருடன் இந்த படத்தில் யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உட்பட பலர் நடிக்கிறார்கள்.
நந்தினி- விக்கி திருமணம்:
இந்த படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மண்ணாங்கட்டி படத்தின் இயக்குனர் விக்கியை தான் நடிகை நந்தினி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.