என்ன மாதவிடாயா ? எச் ராஜாவை மோசமாக விமர்சித்த பிரசாந்த் ? சர்ச்சை ட்வீட் இதோ

0
7202
prasanth

ஒரு திரைப்படம் வெளியாகி ஒருவாரம் கழித்து அந்த திரைப்படம் எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை ரசிங்கர்கள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் கண்ட ரசிகர்களுக்கு தற்போது ஒரு திரைப்படம் வெளியாகி ஒரு சில மணி நேரத்திலேயே அந்த படம் எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை யூடுயூப் மூலம் தெரிந்து கொண்டு விடுகின்றனர். படங்களை விமர்சித்து சமூக வலைத்தளங்களினால் பல்வேறு நபர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமானர் என்று சொன்னால் படங்களை விமர்ச்சிக்கும் “பிரசாந்த் ரங்கசாமி”தான். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

பிரசாந்த் ரங்கசாமி என்பவர் கோயம்புத்தூரில் பிறந்தவர். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடூப் சேனலில் திரைக்கு வெளிவருவதற்கு முன்னரே படங்களை குறித்து கருத்துக்களை சொல்வதில் பிரசாந்த் ரங்கசாமி வல்லவர். இதனால் பிரசாந்த் ரங்கசாமிக்கு யூடியூபில் ஏறத்தாழ 5 லட்சத்துக்கும் மேல் சப்ஸ்கிரைப்பர்ஸ் உள்ளார்கள். அது மட்டுமில்லாமல் டுவிட்டரில் இவர் அக்கவுண்டுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளார்கள். இவர் சமூக வலைத்தளங்களில் நிறைய நன்மை பயக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

இதையும் பாருங்க : அட, தெலுங்கு பாண்டியன் ஸ்டோர்ஸிலும் இந்த நடிகை தான் நடிக்கிறாங்களா. புகைப்படங்கள் இதோ

- Advertisement -

சினிமா மட்டுமில்லாமல் அரசியல், பொது பிரச்சனை என்று பலவற்றை குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அவ்வளவு ஏன் அரசை விமர்சித்து கூட இவர் பல்வேறு பதிவுகளை செய்துள்ளார். இந்த நிலையில் பா ஜ க கட்சியின் செயலாளர் எச் ராஜா ட்விட்டரில் பதிவிட்ட ஒரு கருத்திற்கு பிரசாந்த் ரங்கசாமி கேவலமான ஒரு கமெண்டை செய்துளளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாந்தின் உண்மையான ட்விட்டர் கணக்கு

-விளம்பரம்-

பா ஜ க கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார். இவர் பதிவிடும் பல்வேறு சர்ச்சையான பதிவுகளால் ட்விட்டர் வாசிகளின் கேலி கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் எச் ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் மூன்றாம் நாள் என்று பதிவிருந்த ஒரு ட்விட்டர் பதிவுக்கு, பிரசாந்த் ‘மாதவிடாயா’ என்று மிகவும் கேவலமான ஒரு கமன்ட் நடித்துள்ள பதவி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரசாந்த் பெயரில் இயங்கும் போலி கணக்கு

இந்த டீவீட்டை கண்ட பலரும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், உண்மையில் பிரசாந்த் பெயரில் இருக்கும் போலி கணக்கில் இருந்து தான் இப்படி ஒரு கமெண்டை செய்துள்ளார்கள். மேலும், சர்ச்சையை கிளப்பவே இப்படி ஒரு ட்வீட்டை பிரசாந்த் செய்தது போல உருவாக்கியுள்ளார்கள். இதுகுறித்து பிரசாந்த் எந்த ஒரு பதிவையும் இதுவரை போடவில்லை. அவர் இந்த டீவீட்டை கண்டாரா இல்லையா என்பதும் தெரியவில்லை.

Advertisement