அட, தெலுங்கு பாண்டியன் ஸ்டோர்ஸிலும் இந்த நடிகை தான் நடிக்கிறாங்களா. புகைப்படங்கள் இதோ.

0
80053
pandiyan stores
- Advertisement -

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டார் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த தொடர் ஒளிபரப்பபட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சியின் வெற்றியை அடுத்து சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரை கூட ஆரம்பித்தனர்.

-விளம்பரம்-
Image result for vadinamma serial"

இந்த தொடரில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரம் ஜோடி தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் நடனமாடியுள்ளார்கள். அதே போல அண்ணன் அண்ணி கதாபாத்திரத்தில் ஸ்டாலின் மற்றும் சுஜாதா நடித்து வருகின்றனர். இந்தத் தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் வீட்டில் அண்ணியாக நடித்து வருகிறார் நடிகை சுஜிதா.

இதையும் பாருங்க : கைவிட்ட கணவர் மற்றும் உறவினர்கள். சொத்துக்கள் இருந்தும் அனாதையாக வாழும் கனகா

- Advertisement -

நடிகை சுஜிதா பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில் தான். மேலும், பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் அப்பாஸ் என்ற படத்தில் கே ஆர் விஜயாவின் பேத்தியாக சினிமாவில் தோன்ற துவங்கினர் நடிகை சுஜிதா சீரியல் நடிகையாக அறிமுகமானது பிரபல தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் மூலம் தான். அதற்குப் பின்னர் இவருக்கு மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை தமிழில் அக்கா-தங்கை. திருவிளையாடல். மகாராணி. மருதாணி. விளக்குவைச்ச நேரத்துல. ஒரு கை ஓசை என்று பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான்.

தொலைக்காட்சித் தொடர் மட்டுமல்லாது சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகை சுஜிதா பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இறுதியாக சாய்பல்லவி நடிப்பில் வெளியான இந்தியா படத்தில் ஒரு மருத்துவராக நடித்திருந்தார் மேலும் பவர் தேட்ர்ஜெண்ட் சோப் சண்முகா ஸ்டோர் ஆச்சி குழம்பு மிளகாய்த்தூள் என்று பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இவர் நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதே தொடர் ஸ்டார் மா என்ற தெலுங்கு தொலைக்காட்சியில் வண்டினமா என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்த சீரியல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அண்ணியாக நடித்து வரும் சுஜிதா வண்டினமா தொடரில் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தமிழைப் போலவே தெலுங்கிலும் இவருக்கு என்று பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோரிஸ் இன் தெலுகு ரீமேக் படமான வண்டினம் தொடரில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
.

Advertisement