இலவச பேருந்து பயணத்திற்காக பெண் வேடம் போட்ட யூடியூப் இளைஞரின் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றியுள்ளார்கள். அதில் ஒன்று தான் தமிழ்நாட்டில் பெண்கள் அனைவரும் அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் இந்த ஆணை உடனடியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் யூடியூப் இளைஞர் ஒருவர் பெண் வேடமணிந்து அரசாங்க பேருந்தில் இலவசமாக பயணித்துள்ளார். இந்த பயணம் தொடர்பாக அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்த இளைஞர் சர்ஜன். இவர் யூடியூபில் ஏதாவது ஒரு வீடியோவை போட்டு கொண்டுதான் இருப்பார். அந்த வகையில் தற்போது இவர் பெண் வேடமிட்டு அரசுப் பேருந்தில் பயணித்து அதை குறும்படமாக தயாரித்து வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சர்ஜன் பெண் வேடமிட்டு அரசு பஸ்சில் ஏறி கொள்ள கண்டக்டர் பெண் பயணிகளுக்கு இலவச டிக்கெட்டை வழங்கியிருக்கிறார்.
இதையும் பாருங்க : சென்னைக்கு கொண்டு வரப்பட்ட உமாவின் உடல், கதறி அழுத மெட்டி ஒலி சீரியல் பிரபலங்கள். வீடியோ இதோ.
பின்னர் அவர் பஸ்ஸை விட்டு இறங்கும் போது தான் பெண் அல்ல என்றும் ஆண் என கூறி பஸ் கண்டக்டரிடம் டிக்கெட் பெற்று உள்ளார். மேலும், பெண் வேடமணிந்து இலவசமாக பயணிக்கும் போது நடத்துனர் மற்றும் சக ஆண்கள் நடவடிக்கை எப்படி உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் ஆண்களுக்கும் இலவச பயணம் கிடைக்காதது வருத்தமாக இருப்பதை குறித்தும் இந்த குறும்படம் தயாரிப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பஸ் ஸ்டாண்ட்டில் ஒரு பெண் திடீரென நடமாடி இருந்தால் சுற்றி இருப்பவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை அறிவதற்காகவும், புடவை கட்டிக் கொண்டு ஒரு பெண் புல்லட் ஓட்டி சென்றால் எப்படி இருக்கும் என்றும் வீடியோவாக எடுத்து பதிவிட்டிருந்தார்.
இதையெல்லாம் இவர் தன்னுடைய ரகசிய கேமரா மூலம் பதிவு செய்துள்ளார். 12 நிமிடங்கள் நீளும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்யும் விதமாக மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பனங்காய் வண்டி ஓட்டி சென்ற வீடியோவை சோசியல் மீடியாவில் போட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இப்படியே போனால் அனைத்து ஆண்களும் பெண் வேடம் போட்டுக் கொண்டு தான் பஸ்ஸில் பயணிப்பது போல என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.