தன்னை விமர்சித்த யூடியூபரை நயன்தாரா விலை பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், பல ஆண்டு காலம் லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
இவர் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கால் தடம் பதித்திருக்கிறார். இதை அடுத்து கடந்த ஆண்டு 9ஸ்கின் என்ற சரும பாராரிப்பு தயாரிப்புகளை நயன் அறிமுகப்படுத்திருந்தார். அதற்கு பின் ‘Femi 9’ என்ற நாப்கின் தயாரிப்பை நயன் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த நாப்கின் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும், femi 9 என்ற பிசினஸ் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து சமீபத்தில் மதுரையில் விழா நடத்தி இருந்தார்கள். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்கள், விக்னேஷ், நயன் மாமியார், யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்கள் எல்லாம் கலந்திருந்தார்கள்.
நயன் femi 9 விழா:
இந்த விழாவிற்கு நயன்தாராவை பார்க்க ரசிகர்களின் கூட்டம் திரண்டு இருந்தார்கள். பின் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே நிறைய சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, இன்புளுயன்சர் அழைத்து பேசும்போது சர்ச்சை ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த இன்புளுயன்ஸர் ஒருவர், தயவு செய்து எல்லோரும் கோப்ரேட் பண்ணுங்கள். நயன்தாரா மேடம் நமக்காக வந்திருக்கிறார். அவர்கள் நார்மல் பீப்பிள் கிடையாது. ஒத்துழைப்பு கொடுங்கள் என்று பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானது தொடர்ந்து நெட்டிசன்கள் பலருமே, நயன்தாரா நார்மல் பீப்பிள் இல்லைனா, வேற என்ன? மென்டலா? என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து இருந்தார்கள்.
இன்புளூயன்சர் வெளியிட்ட வீடியோ:
ஏற்கனவே இன்புளுயன்சர் சிலர் வெளியிட்டு இருந்த வீடியோவில், ஒரு செலிபிரிட்டிக்கு இவ்வளவு ஆட்டிடியூட் இருக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை. femi 9 மெகா ஈவன்ட்டுக்கு நிறைய இன்புளூயன்சரை இன்வைட் கொடுத்து வரவேற்று இருந்தார்கள். காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை விழா என்று சொன்னார்கள். நாங்கள் எல்லோருமே காத்திருந்தோம். ஆனால், நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருமே மதியம் 2 மணிக்கு மேல் தான் வந்தார்கள். கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேல் அவர்கள் தாமதம். அதோடு நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தான் முடிந்தது. இதனால் நிறைய பேர் பஸ் எல்லாம் மிஸ் செய்து இருந்தார்கள்.
நயன்தாரா செய்த வேலை:
நிகழ்ச்சிக்குப் பிறகு இன்புளுயன்சரை சந்தித்து பேச சின்ன மீட்டிங் வைத்திருந்தார்கள். அப்போது எல்லோரும் நின்று கொண்டிருந்தோம். உடனே விக்னேஷ் சிவன், என்ன போட்டோ எடுக்கணுமா? வந்து நில்லுங்க என்று ரொம்ப ஆட்டிடியூடாக பேசியிருந்தார். பின் நிகழ்ச்சிக்கு நயன்தாரா தாமதமாக வந்து இருந்ததால் அங்கிருந்த யூடியூபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். இந்த நிலையில் femi 9 விழாவில் நடந்த விஷயத்தை எல்லாம் விமர்சித்து youtubeல் பிரபலமான அடிபொலி புட்டி என்பவர் பதிவிட்டு இருந்தார். இது மிகப்பெரிய வைரல் ஆகி இருந்தது.
யூடியூபரின் செயல்:
இதை அடுத்து நயன்தாரா தரப்பிலிருந்து அவரை அழைத்து அந்த வீடியோவை டெலிட் செய்தால் பணம் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அந்த youtuber அதை டெலிட் செய்யவே இல்லை. பின்னர் இன்ஸ்டாகிராமில் முறையிட்டு அந்த வீடியோவுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து அதை டெலிட் செய்திருக்கிறார் நயன். விமர்சனம் செய்ததற்கு தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி நயன்தாரா செய்த செயலை சோசியல் மீடியாவில் வெளிச்சம் போட்டு காட்டிய யூடியூபரின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.