வலிமை படத்தில் இருந்து யுவன் வெளியேற இது தான் காரணமா ? வெளியான தகவல் .

0
432
- Advertisement -

அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் கடந்த மாதம் இறுதியில் ரிலீசானது. இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கினார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் அஜித் உடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.

-விளம்பரம்-

இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. மேலும், வலிமை படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேல் திரையரங்களில் வெளியாகி தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருட சாதனையை வலிமை செய்து இருக்கிறது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏகே 61 படம் பற்றிய தகவல்:

இந்த நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். ஹைதராபாத்தில் அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே சேர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்து இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏகே 61ல் அஜித் கெட்டப்:

மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நாயகன், வில்லன் இரண்டுமே அஜித் தான் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். இந்த படத்தின் டைட்டிலை வல்லமை என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

-விளம்பரம்-

வலிமை படத்தில் யுவன் விலகியதற்கான காரணம்:

இந்த நிலையில் வலிமை படத்திலிருந்து இசையமைப்பாளர் யுவன் வெளியேறியதற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் அஜித்தின் வலிமை படத்தில் இசை அமைப்பாளராக யுவன் தான் பேசப்பட்டு இருந்தாராம். பின் சில காரணங்களால் அவர் வெளியேறி இருக்கிறார். அது என்னவென்றால், வலிமை படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் தான் இருக்கிறது. ஆனால், யுவன் சம்பளம் கேட்டாராம். அதாவது படத்தில் வழக்கம்போல் ஆறு பாடல்களுக்கு வாங்கும் சம்பளத்தை கேட்டாராம். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் அது எப்படி? 2 பாடல் தானே படத்தில் இருக்கிறது.

yuvan

யுவன் ஷங்கர் ராஜா திரைப்பயணம்:

அதற்கான மொத்த பேமெண்ட் என்னவோ அதை மட்டும் கொடுக்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால், யுவன் அதை மறுத்துவிட்டார். அதற்கு பிறகு தான் ஜிப்ரான் இசையமைப்பாளராக வலிமை படத்திற்குள் வந்ததார் என்று பேசப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். இவர் அரவிந்தன் என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் திரையுலகிற்கு முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

Advertisement