முஸ்லிமாக மாறிய பின் பெயரை மட்டும் மாற்றாமல் இருக்க காரணம் என்ன ? ரசிகரின் கேள்விக்கு யுவன் பதிலடி.

0
2681
yuvan
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் மகன் தனது தந்தைக்கு நிகராக ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும். அரவிந்தன் துவங்கி தற்போது வரை யுவன் எண்ணெற்ற இசை ஆல்பங்களை கொடுத்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா கடந்த 2003 ஆம் ஆண்டு சுஜயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-184-1024x530.jpg

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்ட யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தார். மூன்றாம் திருமணத்திற்கு முன்பாகவே யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை ஏற்று தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

இதையும் பாருங்க : மூக்குத்தி அம்மன் படத்தில் பரிதாபக நடித்த நடிகையா இது ? கொசு வலை போல ஆடையில் கொடுத்த செம கிளாமர் போஸ்.

- Advertisement -

இஸ்லாம் பெண்ணை மூன்றாம் திருமணம் செய்த்க்கொள்ள தான் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்ற விமர்சனமும் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவன் ஷங்கர் ராஜா தனது முகநூல் பக்கத்தில்குர்ரான் பற்றிய பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.இதை பார்த்த ரசிகர்கள் சிலர் மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள் என்று பதிவிட்ட சில சர்ச்சையான கமெண்டுக்கு பதில் அளித்தார் யுவன்சங்கர்ராஜா.

யுவனின் இந்த பதிவிற்கு கீழே முகநூல் வாசி ஒருவர் நாங்கள் அனைவரும் உங்களின் இசைக்காக தான் உங்கள் பேஸ்புக்கை பின் தொடர்கிறோம், மத பிரச்சாரத்திற்கு அல்ல. நான் உங்களை தொடர வேண்டுமா ? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இவன் நீங்கள் என்னை பின் தொடர வேண்டாம் என்று கூறியுள்ளார். அதே போல இஸ்லாமாக மாறிய பின்னர் ஏன் உங்கள் பெயரை மாற்றவில்லை என்று ரசிகர் ஒருவர் கேட்டதர்க்கு, இஸ்லாம் பொறுத்த வரை உங்களின் பெயர் அரபிக்ல் இருந்தாலும் தமிழில் இருந்தாலும் சரி. இஸ்லாமாக இருக்க நீங்கள் எந்த அளவிற்கு நம்புகிறீர்கள் என்பது தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement