நெகட்டிவ் விமர்சனம், FLOP இசையமைப்பாளர் – தன்னை விமர்சிப்பவர்களுக்கு யுவன் பதிலடி

0
326
- Advertisement -

தன்னை குறித்த விமர்சனங்களுக்கு யுவன்சங்கர் ராஜா கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று. மேலும், இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரின் இசைக்கும், குரலுக்கும் என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

இவரின் இசையில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் கொடுத்திருக்கிறது. ஆனால், இன்னொரு பக்கம் யுவன் சங்கர் ராஜாவுக்கு முன்பு போல் மார்க்கெட்டிங் இல்லை. அவர் பெரிதாக படங்களுக்கு இசையமைப்பது இல்லை. இனிமேல் யுவன் திரும்ப மார்க்கெட்டை பிடிப்பது ரொம்ப கஷ்டம் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகின்றார்கள். அதற்கேற்ப தற்போது யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் நடித்து இருக்கும் ‘கோட்’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியிருக்கிறது.

- Advertisement -

யுவன் திரைப்பயணம்:

இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்ஷி, லைலா, சினேகா, அஜ்மல் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. கோட் படத்தில் வெளியான முதல் இரண்டு கோட் நல்ல வரவேற்பை பெற்றாலும், கடைசியாக வெளியான மூன்றாவது பாடல் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு இணைந்து பாடி இருக்கிறார்கள்.

யுவன் குறித்த விமர்சனம்:

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ‘ஸ்பார்க் பாடல்’, மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இருந்தும் கோட் படத்தின் ட்ரெய்லரில் யுவனுடைய பின்னணி இசை நன்றாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் பாராட்டி இருக்கிறார்கள். இப்படி யுவன் சங்கர் ராஜா குறித்து பாராட்டுக்கள் வந்தாலுமே, விமர்சனங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் யுவனைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. அதையெல்லாம் தகர்த்தெறிந்து தற்போது தனக்கென ஒரு இடத்தை யுவன் பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் யுவன் சொன்னது:

இந்த நிலையில் சென்னையில் கல்லூரி ஒன்றில் நடந்த விழாவில் யுவன் சங்கர் ராஜா கலந்திருந்தார். அதில் அவர், சினிமா உலகில் நுழைந்த ஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த படங்கள் எல்லாமே தோல்வி அடைந்தது. அதனால் எனக்கு தோல்வியான, ராசியில்லாத இசையமைப்பாளர் என்று முத்திரை குத்தி விட்டார்கள். அதற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதை நினைத்து நான் பல முறை அழுது இருந்தேன். இதிலிருந்து எப்படியாவது மீள வேண்டும் என்று இசையில் அதிக கவனம் செலுத்த தொடங்கினேன். அதனால் தான் இன்று உங்கள் முன்பு இருக்கிறேன்.

மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை:

நம்முடைய வாழ்க்கையில் நெகட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கும். பேசுற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே கூடாது. நாம் நம்முடைய லட்சியத்தை நோக்கி நடந்து கொண்டே இருக்க வேண்டும். உங்களை வெறுப்பவர்கள், பிடிக்காதவர்கள் உங்களை கீழே இழுத்து தள்ளத்தான் பார்ப்பார்கள். நீங்கள் எப்போதுமே தலை நிமிர்ந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும். அதை நான் செய்ததால் தான் இன்று உங்கள் முன்பு நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். இசை மற்றும் நேர்மையான விஷயங்களுக்கு மட்டும் தான் என் காதுகள் திறந்திருக்கும்.
உங்கள் அனைவரையும் சந்தித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம், நன்றி என்று கூறி இருக்கிறார்.

Advertisement