14 வயதில் யுவன் இசையமைத்த முதல் பாடல் – யுவனை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பதிவிட்ட அறிய புகைப்படம்.

0
938
yuvan
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். இளையராஜாவுக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான்.

-விளம்பரம்-

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா அவர்கள் தன்னுடைய அப்பாவிடமே இசை பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். ஆனால், இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.

இதையும் பாருங்க : ப்பா, தீபா அக்காவா இது ? திருமணத்தின் போது எவ்ளோ ஒல்லியா இருந்திருக்காங்க பாருங்க. இதோ புகைப்படம்.

- Advertisement -

முன்னணி நட்சத்திரங்களில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன், இதுவரை 125 படங்களுக்கு மேல் இணையமைத்துள்ளார். அதே போல தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் படத்திலும் பணியாற்றியுள்ளார் யுவன்.தமிழில் 2000 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்திற்கு இசையமைத்தார் யுவன். அதன் பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு ‘ஏகன், மங்காத்தா’ போன்ற படைகளுக்கு இசையமைத்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா, முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானது சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் தான். இந்த யுவனின் சில ஆல்பங்களை கேட்டு சிவா, இந்த படத்திற்காக ட்ரைலர் இசையை போட்டுகாண்பிக்க சொல்லி இருக்கிறார். பின்னர் அது பிடித்துப்போக யுவனை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். இப்படி ஒரு நிலையில் யுவனின் முதல் பாடல் வெளியிட்டு விழாவின் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சிவா.

-விளம்பரம்-
Advertisement